வல்லை தொண்டைமனாற்று நீர் நிலையில் இலட்சக்கணக்கில் மரணிக்கும் மீன்கள் உட்பட்ட கடல் வாழ் உயிரினங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2014 (வெள்ளிக்கிழமை)
வல்லை தொண்டைமனாற்று நீர் நிலையில் இலட்சக்கணக்கில் மீன்கள் உட்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் நேற்றிலிருந்து இறந்து கொண்டிருக்கின்றன. இதற்கான காரணம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாதுவிடாதினும், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட அதிக வெப்பநிலையே பிரதான காரணம் என நம்பப்படுகின்றது.
மீன்கள் உட்பட்ட பல கடல் வாழ் உயிரினங்கள் தொடர்ந்து மரணித்துக் கொண்டிருப்பதை இப் பகுதிகளில் காணக்கூடியாதாகவுள்ளது.
மேலும் நன்னீர் திட்டத்திற்காக தொண்டைமனாற்றில் தொடர்ந்து மூடப்பட்டுள்ள அணையின் கதவுகள் மூடப்பபட்டுள்ளமையால் குறித்த பகுதியில் உள்ள நீரின் செறிவு குறைந்து செல்வது ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இறந்த மீன்களை அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முகமாகவும், அவ்விடத்திற்கு வந்த வல்வை - பருத்தித்துறை இராணுவ அதிகாரி, மற்றும் நகரசபைத் தவிசாளர்கள், பருத்தித்துறை பிரதேச செயலர், கிராம சேவையாளர் மற்றும் அரச அதிகாரிகளிற்கிடையிலான பேச்சுக்கள் தற்பொழுது இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.