வங்கக்கடலில் (Bay of Bengal) உருவான குறைந்த காற்றழுத்த (Low pressure) தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ம் தேதி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் பலத்த காற்று நேற்று வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் பாம்பன் ரயில் பாலத்தை கடப்பதற்காக காத்திருந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் தரைதட்டின.
இதில் ஒன்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் (Oil Tanker). மும்பைக்கு செல்லும் வழியில் ராமேஸ்வரம் கடலால் சென்றுகொண்டிருந்தது. பாம்பன் பாலம் அருகே இந்தக் கப்பல் தரை தட்டியது (Grounding). பாம்பன் ரயில் பாலத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தரைதட்டிய நிலையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடலில் அதிக நீரோட்டம் (Current) காரணமாக கப்பலின் நங்கூரம் பிடி தளர்ந்ததால், அந்த கப்பல் நகர்ந்து பாலத்தின் மீது மோதியதாக செய்திகள் தெரிவிக்கின்றன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.