எமது இணைய தளமான www.valvettithurai.org, வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களினது செய்திகளையும், மேலும் புலம் வல்வையர்கள் தொடர்புபட்ட செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. இது தவிர பயன்தரவல்ல அல்லது ஏனைய முக்கிய செய்திகளையும் பதிவாக்குகின்றது.
நாமும் எமது வரையறையும்
எமது இணையதளம், தனிப்பட்ட எம்மவர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. எமது இணைய தளம் எந்தவொரு அமைப்பின் கீழும் செயற்படவில்லை. ஆனாலும் பலரது ஆதரவுகள் உண்டு, நிதி நீங்கலாக, இது தற்பொழுது அவசியமும் அல்ல.
வல்வெட்டித்துறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எமது இணையதளம் இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே செயற்படும். வல்வெட்டித்துறையை அடிப்படையாகக் கொண்டு நிருவகிக்கப்பட்டு வந்தாலும், colombo மற்றும் ஒரு சில புலம் பெயர் நாடுகளிலிருந்தும் எமது இணைய தளம் நிருவகிக்கப்பபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
வல்வையின் தற்போதைய நிலையையும், அன்றாடம் வல்வையில் நிகழும் நிகழ்வுகளையும், எல்லோருக்கும் தெரிவிக்கும் நோக்கில் செய்திகளை வெளியிடுவதே எமது பிரதான நோக்கம். அத்துடன் வல்வை வாழ் மக்களுடன் தொடர்புபட்ட ஏனைய செய்திகளையும் தேவைக்கேற்றவாறு வெளியிட முனைகின்றோம்.
உதாரணமாக Hartley College, நெல்லியடி யாழ் நகரம் போன்றவற்றில் வல்வை மக்களின் பிரசன்னமும் உள்ளது. ஆகவே இவை போன்றவற்றுடன் தொடர்புபட்ட முக்கிய செய்திகளும் முக்கியம் என்று நாம் கருதுகின்றோம்.
அத்துடன் எல்லோரும் அறிந்த கொள்ள வேண்டிய செய்திகளையும் அவ்வப்போது பிரசுரிப்பதும் இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதவொன்று. எல்லாவற்றுக்கும் மேலாக, வல்வை மக்களுக்கு வந்தடையுமுகமாக, புலம் பெயர் வல்வையர்களின் செய்திகளையும் பதிவாக்க முனைகின்றோம்.
தவிர்ப்போம்
இங்கு வல்வையில் வாழும் மக்களின் சகஜ வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் செய்திகள் மற்றும் வல்வையின் மீதோ அல்லது இங்கு வாழும் மக்களின் மீது குழப்பங்களை உண்டுபண்ணக் கூடிய செய்திகள் தவிர்க்கப்படும் . ஆனாலும் சர்ச்சைக்குரிய, மற்றும் வாதங்களுக்குரிய செய்திகளைப் பதிவாக்குவோம்.
செய்திகள் மற்றும் புகைப்படங்களின் ஆதாரங்கள்
வல்வை தொடர்புபட்ட செய்திகள் அனைத்தும் எம்மால் முற்றுமுழுதாக சேகரிக்கப்படுபவையாகும், அல்லது எமக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பப்படுபவையாகும்.
பொதுவான பயனுள்ள செய்திகள் அரச உத்தியோக பூர்வ ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும் அல்லது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நம்பகத்தன்மையுள்ள இணையங்களை அடிப்படையாகக் கொண்டாவையாகும். ஆனாலும் இச்செய்திகளின் இறுதியில் எம்மால் எமது மக்களுக்கு ஏற்றவாறு சிறு விவரங்கள் கொடுக்கப்படலாம்.
எம்மால் சேகரிக்கப்படாத அல்லது எமக்கு உத்தியோக பூர்வமாக கிடைக்காத செய்திகள் எமது இணையத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது.
புகைப் படங்கள்
எமது இணையத்தில் வெளியாகும் வல்வை உட்பட்ட உள்நாட்டுப்புகைப்படங்கள் மற்றும் சில குறிப்பிடக்கூடிய வெளிநாட்டுப்படங்களும் எமது உறுப்பினர்களாலேயே எடுக்கப்படுபவையாகும். ஏனையவை எமக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பப்படுபவையாகும்.
படங்களில் Logo
இது சம்பந்தமாக சிலர் அதிருப்தி தெருவித்துள்ளனர். எமது செய்தி மற்றும் படங்கள் பலரைச் சென்றடைய வேண்டும் எமது நோக்கம். ஆனாலும் எமது செய்திகளையும், படங்களையும் தற்கால தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி (Copy and paste, Photoshop) செய்திகளை சிறிது மாற்றி எவரும் வெளியிடுவதிலோ அல்லது தாமே செய்திகள் வெளியிடுவது போல் வெளியிடுவதிலோ எமக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இது எமது கடின உழைப்பைக் கொச்சைப் படுத்துவதாகவுள்ளது.
ஆனாலும் சில இணைய தளங்கள் எமது செய்திகளை நாணயமாக வெளியிடுகின்றார்கள் என்பதையும் மறுப்பதற்கல்ல.
தவறுதலாக விடுபடும் செய்திகள்
நாம் இதனை ஒரு சேவையாகவே, பகுதி நேரமாக செய்து வருகின்றோம். ஆகவே சில செய்திகள் சில நேரங்களில் பதிவாகாமல் போகலாம், இவை தவறுதலாக விடுபடுவையேயாகும். இவை தவிர்க்க முடியாதவையாகும்.
வாசகர்களுக்கு நன்றி
பல்வேறு வகையிலும் எமக்கு ஆதரவு நல்கி வரும் வாசகர்கள்,நண்பர்கள் மற்றும் பெரியோர்களுக்கு நன்றிகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.