தைப்பொங்கல் தினத்தன்று இரவு தென்னையை எரித்தது குருவி வாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2013 (திங்கட்கிழமை)
தைப்பொங்கல் தினத்தன்று இரவு எட்டு மணியளவில் மக்கள் பட்டாசு மற்றும் வாணம் கொளுத்தி கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், வல்வெட்டித்துறை வேம்படி சில்லாலை பகுதியில் விடப்பட்ட குருவி வானம் ஓன்று தென்னை ஒன்றின் வட்டில் அகப்பட்டதால் தென்னை எரிய ஆரம்பித்தது.
தென்னை எரிவதை அவதானித்த வீட்டவர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சி செய்தனர். தென்னை உயரமாக இருந்ததனால் தீயை அணைப்பது சிரமமாக இருந்தது. பின்னர் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் நீர் இறைக்கும் எந்திரத்தினைக்கொண்டு சுமார் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின் தென்னையில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ அணைப்பு படை (Fire Brigade) வசதிகள் ஏதும் அற்ற குடா நாட்டு பகுதியில் மக்கள் குருவி வாணம் விடுவது மிகவும் ஆபத்தான விடயம் என்பதை வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தென்னை எரிந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.