யாழ் பல்கலைக் கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் வல்வைக்கு சுற்றுலா
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2013 (வெள்ளிக்கிழமை)
யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் 3ம் வருட நிதியியல் (Finance)பிரிவு மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா மேற்கொண்டு வல்வெட்டித்துறை, தொண்டமானாறு செல்வசந்நிதி ஆலயம், தொண்டமானாறு பெரிய கடற்கரை மற்றும் வல்வை பொது விளையாட்டு அரங்கம் போன்ற இடங்களுக்கு வருகை தந்தனர்.
அவர்கள் இங்கு உள்ள இடங்களை பார்வையிட்ட பின் பருத்தித்துறை, மணற்காடு மற்றும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் போன்ற இடங்களுக்குச் சென்றனர்.
சுமார் 45 மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலாவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. வல்வெட்டித்துறையும் அதனை அண்டிய பிரதேசகளும் மிகவும் அழகாவும், சிறப்பாகவும் உள்ளதாக முகாமைத்துவ பீட மாணவர்கள் தெரிவித்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.