மூன்றாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2013 (சனிக்கிழமை)
வல்வை மாணவர்களின் கல்வியை அபிவிருத்தி செய்வதனை நோக்கமாகக் கொண்டு VEDA நிறுவனமானது 2011.02.07அன்று தோற்றம் பெற்றது.
இன்று தனது இரண்டாவது ஆண்டினை வெற்றிகரமாக பூர்த்தி செய்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் VEDA நிறுவனத்தின் பாரிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த அனைத்து வல்வையின் நலன்விரும்பிகளுக்கும் VEDA தனது நன்றியினை இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றது.
VEDA நிறுவனத்தின் கல்விச்சேவை தொடர்ந்து நடைபெறுவதற்குஅனைத்து ஆர்வலர்களின் பங்களிப்பினையும் VEDA எதிர்பார்த்து நிற்கிறது.VEDA நிர்வாகமானது பொறுப்புக் கூறுதல், கணக்குக் காட்டுதல், வெளிப்படைத்தன்மை எனும் உயரிய பண்புகளுடன்செயற்படுவதுடன், இதற்கமைவாக மாதம் தோறும் செயற்பாட்டறிக்கை, கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கை போன்றவற்றை வெளியிட்டு திறமையாகசெயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது ஆண்டில் VEDA நிறுவனமானது வல்வை மாணவர்களின் கல்வி அபிவிருத்தியில் மேலும் பல பங்களிப்புக்களை செய்யவும் திட்டமிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.