விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2013 (சனிக்கிழமை)
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் , புதிய நிர்வாகசபை உறுப்பினர் தெரிவும் இன்று காலை பத்து மணியளவில், வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் அமைந்துள்ள வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தில் நடைபெற்றது.
இப் பொதுக் கூட்டத்தில் 2012ம் ஆண்டிற்கான கணக்கறிக்கை மற்றும் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டது. அதன் விபரம் வருமாறு,
தலைவர் - திரு லெ.கிருபாகரன்
உப தலைவர் - திரு இ. இராசேகரம்
செயலாளர் - திரு ர. குகேந்திரன்
உப செயலாளர் - திரு ச.கிரிதரன்
பொருளாளர் - திரு பா.உதயகுமார்
ஏனைய நிர்வாக உறுப்பினர்கள்
திரு செ .சுசிந்திரன்
திரு வி . கவிச்செல்வன்
திரு த .சிவகுமார்
திரு பா .பிரதீபன்
திருமதி தா .தர்சினி
செல்வி யோ .நித்தியா
கணக்காய்வாளர் - திரு தி.கனகசபாவதிப்பிள்ளை
போசகர்கள் - திரு செ . நவரத்தினம்
- திரு க .முருகுப்பிள்ளை
- திரு தி .செல்வசிவம்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள் . இதனை தொடர்ந்து புதிய செயலாளரின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.