2011ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 2011/2012 ஆம் கல்வியாண்டுக்கான Z வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2013 (புதன்கிழமை)
2011 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாடத்திட்ட மாற்றத்திற்கு அமைவாக, 2011/2012 ஆம் கல்வியாண்டுக்கான Z வெட்டுப்புள்ளிகள் புதிய பாடத்திட்டத்திற்கும், பழைய பாடத்திட்டத்திற்கும் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெட்டுப்புள்ளிகள் 10/02/2013 அன்று வெளியிடப்பட்டதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Z வெட்டுப்புள்ளி முடிவுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ இணையதளம் http://www.ugc.ac.lk/என்ற இணைத்தளத்தில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான Z வெட்டுப்புள்ளி வெளியீட்டில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக 2011/2012 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.