2013 இல் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு மார்ச் மாதத்துக்குள் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2013 (புதன்கிழமை)
2013 ஆம் ஆண்டிற்காகப் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மார்ச் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேலதிக செயலாளர் பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. மேற்படி வெட்டுப்புள்ளிகள் புதிய, பழைய படவிதானங்களின் அடிப்படையில் தனித் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இம்முறை 26,950 மாணஆவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக உள்ளதாகவும் வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு தெரிவான மாணவர்களுக்கு இரண்டு வாரங்களில் கடிதம் மூலம் அதுகுறித்து அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.