வல்வை குழவிகள் கலா மன்றம் வெளியிட்டுள்ள நன்றியறிவித்தலுடன் கூடிய மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2013 (வியாழக்கிழமை)
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வல்வை குழவிகள் கலா மன்றம் முப்பரிமாண கலைப்படைப்புக்களையும், வானில் பறக்கும் முப்பரிமாண உருவப்பட்டங்களையும் உருவாக்கி வருகின்றது. தமது ஆக்கங்களிற்கும் உழைப்பிற்கும், ஊக்கமும் உதவியும் அளித்த உறவுகளிற்கு வல்வை குழவிகள் கலா மன்றம் தமது நன்றியை தெரிவித்து உள்ளது.
வல்வை குழவிகள் கலா மன்றம் பற்றிய விவரணம் ஏற்கனவே எமது இணையதளத்தில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வை குழவிகள் கலா மன்றம் வெளியிட்டுள்ள நன்றியறிவித்தலுடன் கூடிய மடல் எமது வாசகர்களின் பார்வைக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது ;
குழவிகள் கலா மன்றத்தின் நன்றியறிவித்தலுடன் கூடிய மடல்
கலை என்பது பெரும் சமுத்திரம், பரந்து விரிந்தது, அழகானது, ஆழமானது இதனை கையாலும் விதத்தில் அது நமக்கு பல வடிவங்களில் வெளிப்படித்துகின்றன. கடந்த இரண்டு வருடங்களின் முன் எமது வல்வை குழவிகள் கலாமன்றம் கருவுற்றது. 2011 ஆம் ஆண்டு எமது வல்வை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா அன்று குழவிகளின் முதலாவது கன்னிப்படைப்பு ஆரம்பமாகியது. அதன் பின் கலை நிகழ்வுகள், போட்டிகள், வெளியூர் திருவிழாக்கள், எமது முத்துமாரியம்மன் திருவிழாக்காலங்கள் என பல படைப்புக்கள் வெளிப்பாடுத்தப்பட்டன. எமது குழுவினரின் நோக்கம், குறிக்கோள் எம்மிடம் காணப்படும் இலகுவில் கிடைக்கப்பெறும் பொருட்களைப் பெற்று பெரும் உடல் உழைப்புடன் செலவுகளிக் குறைத்து கலையில் ஆர்வமுள்ளவர்கள் சேர்ந்து, எம்முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற கலை வடிவங்களை மீளவும் சிறு புதுமைகளுடன் மக்கள் முன் வெளிப்படித்துவதே. இங்கு எமது அறிவையும், உடல் உழைப்பையுமே பெரும்பாலும் நம்பியுள்ளோம்.
கடந்த காலங்களில் வெளியான எமது படைப்புக்கள் பெரும் செலவுடன் செய்யப்பட்டது போல தோன்றலாம். ஆனால் அவை செலவுகள் குறைக்கப்பட்டே பெரும் உடல் உழைப்பாலேயே உருவாகியது. அதற்கு சான்றாக கடந்த வருடம் செய்த பெரும் படைப்பான ''நர்த்தன விநாயகர்'' ஆவார். இதனைச் செய்யும் போது ஊர் பிரமுகர்கள் நேரில் பார்வையட்டு பாராட்டி பணவுதவியும் செய்திருந்தார்கள். இதைவிட எமது இணையத்தளம் மூலம் பார்வையிட்ட புலம்பெயர் ஊரவர்கள் சிலரும் உதவி செய்திருந்தனர். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். இது தவிர எமக்கு கடதாசி சேகரிக்கும் போது மனமுவந்து பல தனிப்பட்டவர்களும் ஊர் அமைப்புகள் சிலவும் இன்முகத்துடன் உதவிசெய்தார்கள். அவர்களுக்கும் எமது நன்றிகள். மேலும் ''நர்த்தன விநாயகரின் சிலை '' சந்தியில் வைப்பதற்கும் , வடிவமைப்பதற்கும் எமக்கு பல வழிகளில்(மரந்தடிகள், மின்சாரம் ) உதவிய நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் அமைப்பினருக்கும் நன்றிகள், மேலும் சரீர உதவிகள் செய்த நண்பர்களுக்கும், எமக்குரிய போக்குவரத்து உதவிகளை செய்த, எமது இடத்தில் வேலை செய்யும்போது தேநீர், உணவு தந்த குடும்ப மாதுக்களுக்கும் நன்றிகள். (இவற்றுக்கெல்லாம் மேலாக எமது எல்லாக் கருமங்களையும் சிறப்புற நடைபெற அருள்புரிந்த கடவுளுக்கும் நன்றிகள்).
எமது குழவிகள் கலாமன்றத்தின் படைப்புக்கள் பற்றியும், அதன் நடவடிக்கைகள் பற்றியும், பார்க்கும் வண்ணம் பிரசுரித்த எமது ஊர் இணையத்தளங்களுக்கும் நன்றிகள். இதற்கு முன்னோடியாக தாமாகவே மனமுவந்து எமது படைப்புகளையும், எமது கலா மன்றம் பற்றியும், அதன் நிலைப்பாட்டைப் பற்றியும் valvettithurai.org அமைப்பினர் உலகம் முழுவதும் இருக்கும் எமது உறவுகளுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கும் எமது நன்றிகள்.
இனிவரும் காலப்பகுதிகளில் எமது அமைப்பின் படைப்புக்கள் மேலும் பல வடிவங்களில் வெளிவருவதுடன் எமது வல்வையை பெருமையடையச் செய்வதுடன், எமது பண்பாட்டினையும் பாதுகாக்கும் என்பதையும் ஆணித்தரமாக அறிவித்திக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.