வல்வெட்டித்துறை மக்கள் வங்கிக் கிளையின் சனிக்கிழமை வங்கிச் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை மக்கள் வங்கிக் கிளையானது சனிக்கிழமை வங்கிச் சேவையை ஆரம்பித்துள்ளது.
வல்வெட்டித்துறை மக்கள் வங்கிக் கிளையானது இனி வரும் காலங்களில் பிரதி சனிக்கிழமை தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12.00 மணி வரை வாடிக்கையாளர் சேவைக்காகத் திறந்திருக்கும் என்பதை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெரியத்தருவதுடன், பின்வரும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றது.
அடகுச்சேவை - அடகு வைத்தல்,
மீள எடுத்தல்,
சேமிப்புக் கணக்கு - வைப்பிலிடல்,
மீளப்பெறல்,
நடை முறைக் கணக்கு வைப்பிலிடல்,
நிலையான வைப்புக் கணக்கு வைப்பிலிடல்,
அனைத்து வகைக் கணக்குகளையும் புதிதாக ஆரம்பித்துக் கொள்ளல்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.