புட்கரணி பிள்ளையார் கோவிலின் தீர்த்தம் நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2013 (திங்கட்கிழமை)
புட்கரணி பிள்ளையார் நேற்று காலை 7 மணியளவில் தீர்த்தமாடுவதற்காக ஊறணி தீர்த்தக்கடற்கரையை நோக்கி தனது ஆலயத்திலிருந்து புறப்பட்டார்.
ஊறணி தீர்த்தக்கடற்கரையை அடைந்ததும் ஊறணி சமுத்திரத்தில் தீர்த்தமாடி அங்கே சற்று நேரம் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து பின் அங்கிருந்து நெடியகாடு பிள்ளையார் கோவில் முன்றலை அடைந்து அங்கு தங்கி, இன்று இரவு8 மணியளவில் நெடியகாடு பிள்ளையார் கோவிலிலிருந்து புறப்பட்டு தன் ஆலயத்தை வந்தடைந்தார். இது சம்பந்தமான படங்கள் உங்கள் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.
புட்கரணி ஆலயத்தில் 16ந் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திருவிழா நேற்று தீர்த்தத் திருவிழாவுடன் முடிவடைந்தது. இக்கோயிலில் பத்துத்தினங்கள் திருவிழா நடைபெறுவது வழமை. அத்துடன் ஒவ்வொரு மாசிமகத்திலும் தீர்த்தத் திருவிழா இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.