வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற புதிய பணிமனைக்கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2013 (சனிக்கிழமை)
வல்வை நகராட்சி மன்ற புதிய பணிமனைக்கட்டிடத் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை பி.ப 12.31-13.10 மணியளவில் நகராட்சி மன்றத் தலைவர் திரு நடராஜா அனந்தராஜ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக திரு கே.என் . டக்ளஸ் தேவானந்தா (பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் ) அவர்களும் , திரு .ஜி .ஏ .சந்திரசிறி(ஆளுநர் , வடக்குமாகாணம்) அவர்களும், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .
இப்புதிய வல்வை நகரசபைக்கான அடிக்கல்லானது 1999 மே மாதம், வல்வை அம்மன் கோவில் குளிர்த்தித் திருவிழா அன்று, அப்போதைய நகரசபைத் தலைவர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் நாட்டப்பட்டது. இது 1990 இன் முற்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி திரு.R.பிரேமதாச அவர்களின் அரசுடன் தமிழீழ விடுதலை புலிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 'நகர நிர்மாணத் திட்டத்தின்' ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகர நிர்மாணத் திட்டத்தின் கீழேயே, நகரசபைத் திட்டத்தை விட , 1987 இல் சேதமடைந்த வல்வைச் சந்தை பொது கட்டடத்தின் புணருத்தாரன வேலைகள், வல்வை மீன் சந்தை, வல்வைப் பொது நூலகமும் பஸ் தரிப்பிடமும், மற்றும் கலாச்சார மண்டபம் போன்றன அமைப்பதற்கான வரைபடமும், திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு சில வருடங்கள் தடை பட்டிருந்த நகரசபைக் கட்டடத்தின் கட்டுமான வேலைகள் மீண்டும் இப்பொழுது 'பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்' கீழ் உள்ள என்றிப் [Emergency Northern Recovery Project (ENReP)] திட்டத்தின் கீழ் பூர்த்தியடைந்து நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.