சிவராத்திரி விழாவை முன்னிட்டு வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தால் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2013 (திங்கட்கிழமை)
சிவராத்திரி விழாவை முன்னிட்டு வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தால் அணிக்கு இருவர் கொண்ட கடற்கரை கரப்பந்தாட்ட (Beach Volleyball) சுற்றுப் போட்டி நேற்று இரவு வல்வை காட்டுவளவு நேதாஜி கடற்கரையில் மின்னொளியில் நடாத்தப்பட்டது.
இதில் வல்வைக்கு உட்பட்ட 12 கழகங்கள் விலகல் முறையிலமைந்த போட்டி அட்டவணையின் கீழ் பங்குபற்றின. விறு விறுப்பாக நடந்த போட்டியின் முடிவில் வல்வை உதயசூரியன் கழகமும் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இதில் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகம் வல்வை உதயசூரியன் கழகத்தை 2:0 என்ற நேர் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றது. இந்தச் சுற்றுப் போட்டியின் சிறந்த வீரருக்கான விருது ரேவடி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சீலனுக்கு வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.