வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் பதினோராம் நாள் திருவிழாவான திருக்கல்யாணம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இத்திருவிழாவில் சிவபெருமானுக்கும் அம்மனுக்கும் காலை திருக்கல்யாணம் மகோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற திருவிழாவில் சிவனும் அம்மனும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தண்டிகை எனும் வாகனத்திலும், பிள்ளையார் மற்றும் முருகப்பெருமான் நான்கு கால்களை உடைய கேடகம் என்ற வாகனத்தில் வீதி உலா வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பித்து, தற்போது தொடந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பிரசித்திபெற்ற புராதனவும் பழையதுமான வல்வெட்டித்துறை சிவன் கோவில், திரு. வே .பிரபாகரனின் மூதாதையர்களுக்குச் சொந்தமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.