வல்வெட்டித்துறை சிவன் கோவில் தீர்த்தத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2013 (புதன்கிழமை)
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 16ஆம் நாளான இன்று, தீர்த்தத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை நடேசர் அபிஷேகம் நடைபெற்று, வீதி உலா வந்ததைதொடர்ந்து, உற்சவ மூர்த்தியான சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஊறணி தீர்த்தக் கடற்கரையை அடைந்து, அங்கு தீர்த்தமாடினார். ஊறணி தீர்த்தக்கடற்கரையை அடைந்ததும் ஊறணி சமுத்திரத்தில் தீர்த்தமாடி அங்கே சற்று நேரம் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து பின் அங்கிருந்து நெடியகாடு பிள்ளையார் கோவில் முன்றலை அடைந்து அங்கு தங்கி, இன்று இரவு 8 மணியளவில் தண்டிகை மஞ்சத்தில் மணவாள கோலத்தில் நெடியகாடு பிள்ளையார் கோவிலிலிருந்து புறப்பட்டு தன் ஆலயத்தை வந்தடைந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.