வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 8ம் நாள் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/04/2013 (வியாழக்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 8ம் நாளான இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வேட்டைத் திருவிழாவிற்கான வசந்த மண்டப பூசை ஆரம்பமாகி ஒற்றை குதிரை வாகனத்தில் ஏறி, அம்பாள் வேட்டைக்கு புறப்பட்டார்.
வேட்டைத் திருவிழாவிற்காக அம்மன் நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தை நோக்கி சென்றார். அங்கு வேட்டைத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அதன்பின் பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூசை நடைபெற்று உடனே தனது ஆலயம் நோக்கி சென்றார். வழி எங்கிலும் அம்மன் வருகைக்காக நிறைகுடங்களை வாசல் தோறும் வைத்து பக்தர்கள் வழிபட்டார்கள்.
அம்பாள் தனது ஆலயம் சென்றடைந்ததும் அங்கு குற்றம் கழித்த பின்னர் இரவுப்பூசை நடைபெறும்.
அம்மன் வேட்டைக்கு செல்லும் போது புதிதாக செய்யப்பட்ட திருவாசியில் தான் வேட்டைக்கு சென்று வேட்டை ஆடினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.