வல்வெட்டித்துறை காய்கறி சந்தை தற்பொழுது அம்பாள் வெதுப்பகத்திற்கு அருகாமையில் இயங்கி வருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2013 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை காய்கறிச் சந்தை இதுவரை நடைபெற்று வந்த இடத்தில், புதிய சந்தைக்கான கட்டிட வேலைகள் ஆரம்பித்துள்ள காரணத்தால் சந்தையானது, தற்காலிகமாக காங்கேசன்துறை பருத்தித்துறை வீதியில் அம்பாள் வெதுப்பகத்திற்கு அருகாமையில் இயங்கி வருகின்றது.
வல்வெட்டித்துறையில் NELSIP (North East Local Services Improvement Project - வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி ஒன்று வல்வை நகரசபையினால் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.