வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் ‘மகாசென்’ - வல்வெட்டித்துறையிலும் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2013 (திங்கட்கிழமை)
முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ தாழமுக்கம் (Severe cyclonic storm), தற்போது மணித்தியாலத்திற்கு 10-20 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இரவு அல்லது புதன்கிழமை காலை பங்களாதேஷையோ அல்லது மியன்மாரையோ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தாழமுக்கத்தினால் இலங்கையின் காலநிலையிலும் மோசமான நிலை ஏற்பட்டாலும், நேரடியான பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. ஆனாலும் இலங்கையின் வடபகுதியில் பலத்த மழை ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. வங்காள விரிகுடாவில் தாழமுக்கமானது (Tropical cyclone) மே மாதத்தில் ஆரம்பித்து நவம்பர் மாதம் வரை நீடிக்கின்றது.
போன வருடம் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட நிலாம் தாழமுக்கத்தினால், இலங்கையின் வட பகுதியில் பலத்த சேதங்கள் ஏற்ப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க ஒரு புதிய தாழமுக்கமானது, ஆரபியக் கடலின் நடுப்பாகத்திற்கு சற்று கிழக்காக இன்னும் 10 - 12 நாட்களில் உருவாக வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டு செயற்படும் புயல் அவதான நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது.
கீழே உள்ள படங்களில் தாழமுக்கம் ‘மகாசென்’ யின் எதிர்பார்க்கப்படும் பாதை காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.