வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக ((Severe Cropical cyclonic storm - Mahasen) வல்வெட்டித்துறையிலும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி படகில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இவரின் நிலை பற்றி மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
மேற்குறிப்பிட்ட நபர் செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் வயது 18, வல்வெட்டித்துறை ஆலடியை சேர்ந்தவர் ஆவார் என அறியப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.