பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ( Ministry of Economic Development) மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு (Ministry of Water Supply and Drainage) ஆகியவற்றின் ஒரு திட்டத்திற்கமைய, முன்னெட்டுக்கப்பட்டுவரும் வல்வெட்டித்துறை நீர் வழங்கல் திட்டத்தின் ( Valvettithurai water supply project) ஒரு பகுதியான தொண்டைமானாற்றில் அமைந்துள்ள பாரிய நீர்த் தாங்கியின் வேலைகள் பூர்த்தியாகி வருவதனைக் கீழேயுள்ள படங்களில் காணலாம்.
ரூபா 348.57 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுவரும் இந்தத் திட்டத்தின் கீழ், பருத்தித்துறை பிரதேசசபையின் கீழுள்ள தொண்டைமானாறு வடக்கு,கெருடாவில், வடக்கு மற்றும் தெற்கு, வல்வெட்டித்துறை வடமேற்கு, வடக்கு, மத்தி, வடகிழக்கு, பொலிகண்டி மேற்கு மற்றும் கிழக்கு, மற்றும் கம்பர்மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10,000 குடும்பங்கள் பயன் பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக குழாய்கள் அமைக்கும் பனி ஏற்கனவே வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் நடை பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் தொண்டைமானாற்றில் அமைந்துள்ள பாரிய நீர்த் தொட்டி (Over head tank), மற்றும் ஊழியர்கள் அலுவலகம், ஊழியர்கள் தங்குமிடம், இயந்திரம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட உபகரணங்களுக்கான கட்டத்தொகுதி என்பனவை காணப்படுகின்றன.
அத்துடன் தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்தின் கோபுரமும், தேர் கொட்டைகையும் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இச் செய்தியை ஆங்கிலத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.