சில தினங்களுக்கு முன்னர் நாம் 'இம்முறையும் வல்வையில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் பயிலும் மணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, ஒரு சிலரே க.பொ .த (சா/த) பரீட்சையில் சித்தியடையாதவர்களின் எண்ணிக்கை கவலைக்குரிய தொன்றாகவுள்ளதும் என்றும் செய்தி வெளியிட்டிருந்தோம். இதற்கு அதிருப்தி தெரிவித்து வாசகர் ஒருவர் விபரம் தெரிவித்துள்ளர்.
குறித்த வாசகரின் தகவல் எதுவித மாற்றமின்றி கீழே பிரசுரிக்கப்படுகின்றது.
வணக்கம் ஆசிரியர் குழு,
வல்வையில் கணிதம் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் எழுச்சி
உயர்தர கணிதம் விஞ்ஞான பிரிவுகளுக்கு பின்வரும் பாடசாலைகளில் இருந்து சென்ற மாணவர் எண்ணிக்கை :
2012 இல் -7
சிதம்பராவிலிருந்து - 2
மகளிரிலிருந்து - 2
சிவகுருவிலிருந்து - 3
தற்போது 2013 இல் 13
சிதம்பராவிலிருந்து - 5
மகளிரிலிருந்து - 3
சிவகுருவிலிருந்து - 5
கணிதம் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
O/L பரீட்சையில் சித்தி வீதம் பாடசாலை ரீதியாக:
2011 டிசம்பர் பரீட்சை சித்தி வீதம்
சிதம்பரா - 37%
மகளிர் - 31%
சிவகுரு - 33%
2012 டிசம்பர் பரீட்சை சித்தி வீதம்
சிதம்பரா - 48%
மகளிர் - 83.6
சிவகுரு - 59%
இம்முறை O/L பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தயவு செய்து இவ்விபரங்களை சரிபார்த்து உண்மையான செய்தியை வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.