பிரபல பின்னணி பாடகர் T.M.சௌந்தரராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். டி.எம்.எஸ் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர், 1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். தனது 7வது வயதில் சங்கீதம் கற்க ஆரம்பித்து, எம்.கே.தியாகராஜ பாகவதரின் இசைபள்ளியில் சேர்ந்து மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். பின்னர் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா அவர்களால் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டார். கடந்த அறுபது ஆண்டுகளாக பின்னணி பாடகர்களில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட அன்றைய திரையுலக ஜாம்பவான்களின் ஏராளமான படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். ஒரு பாடகருக்கு ஒரு நடிகரின் குரலோ அல்லது இரண்டு நடிகரின் குரலோ பொருந்தும், ஆனால் டி.எம்.எஸ், சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குரலில் பாடும் வல்லமை படைத்தவர். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நடிகர்களே உண்மையாக உணர்வுப்பூர்வமாக பாடுவது போன்று பிரமிப்பை ரசிகர்களுக்கு உருவாக்கியது என்றால் மிகையல்ல.
இதுவரை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமின்றி பக்தி பாடல்களே சுமார் 2000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அன்றைய எஸ்.எம்.சுப்பையா தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களிடம் இவர் பணியாற்றி உள்ளார். கடைசியாக ரஹ்மானின் இசையில் வெளிவந்த செம்மொழியான தமிழ் மொழியாம்... பாடலை பாடியிருந்தார்.
மறைந்த டி.எம்.எஸ்-க்கு சுமித்ரா(84) என்ற மனைவியும், மல்லிகா(60) என்ற மகளும், பால்ராஜ்(59), செல்வராஜ்(57) என்ற இரு மகன்களும் உள்ளனர்.
திரையுலகில், டி.எம்.எஸ்.இன் கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு 2003ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், தமிழக அரசு கலைமாமணி விருதும் வழங்கி கவுரவித்தது. இதுதவிர பல்வேறு விருதுகளையும், டாக்டர் பட்டங்களையும் டி.எம்.எஸ். பெற்றுள்ளார்.
இவரது திறமையை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் இவருக்கு ஏராளமான பட்டங்களை வழங்கின. பாடகர் திலகம், சிம்மக் குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், எழிலிசை மன்னர், குரல் அரசர் போன்றவை இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள்.
காலத்தால் அழியாத டி.எம்.எஸ். அவர்களின் பாடல்கள் சில இதோ..., 01. நான் ஆணையிட்டால்... (எங்க வீட்டு பிள்ளை), 02. ஆண்டவன் படச்சான்... (நிச்சய தாம்பூலம்), 03. ஆறு மனமே ஆறு... (ஆண்டவன் கட்டளை), 04. அச்சம் என்பது மடமையடா... (மன்னாதி மன்னன்), 05. அதோ அந்த பறவை போல... (ஆயிரத்தில் ஒருவன்), 06. அமைதியான நதியினிலே... (ஆண்டன் கட்டளை), 07. அன்பே வா அன்பே வா... (அன்பே வா), 08. அன்று வந்ததும் இதே நிலா... (பெரிய இடத்து பெண்), 09. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே... (உயர்ந்த மனிதன்), 10. அழகிய தமிழ் மகள்... (ரிக்ஷாக்காரன்), 11. சின்ன பயளே சின்ன பயளே... (அரசிளங்குமரி), 12. தெய்வமே தெய்வமே... (தெய்வமகன்), 13. ஏன் பிறந்தாய் மகனே... (பாகப்பிரிவினை), 14. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... (பணத்தோட்டம்), 15. எங்கே நிம்மதி... (புதிய பறவை), 16. இந்த புன்னகை என்ன விலை... (தெய்வத்தாய்), 17. இரண்டு மனம் வேண்டும்... (வசந்த மாளிகை), 18. இரவினில் ஆட்டம்... (நவராத்திரி) , 19. காது கொடுத்து கேட்டேன்... (காவல்க்காரன்), 20. கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்... (வானம்பாடி), 21. கடவுள் ஏன் கல்லானார்... என் அண்ணன், 22. கண் போன போக்கிலே... (பணம் படைத்தவன்), 23. கண்ணை நம்பாதே... (நினைத்ததை முடிப்பவன்), 24. காகிதத்தில் கப்பல் செய்து... (அன்புக்கரங்கள்), 25. மலர்களை போல் தங்கை... (பாசமலர்), 26. மலர்ந்து மலராத... (பாசமலர்), 27. நாளை நமதே... (நாளை நமதே), 28. நான் பேச நினைப்பதெல்லாம்... (பாலும் பழமும்), 29. நல்லவன் எனக்கு நானே நல்லவன்... (படித்தால் மட்டும் போதுமா), 30. நிலவை பார்த்து வானம் சொன்னது... (சவாலே சமாளி), 31. நிலவு ஒரு (உலகம் சுற்றும் வாலிபன்), 32. ஒளிமயமான எதிர்காலம்... (பச்சை விளக்கு), 33. ஓடும் மேங்களே... (ஆயிரத்தில் ஒருவன்), 34. ஒரு பெண்ணை பார்த்து... (தெய்வத்தாய்), 35. பால் இருக்கு பழம் இருக்கு... (பாவமன்னிப்பு), 36. பாரப்பா பழனியப்பா... (பெரியிடத்து பெண்), 37. பார் மகளே பார்... (பார் மகளே பார்), 38. பட்டிக்காடா பட்டணமா... (மாட்டுக்கார வேலன்), 39. பேசுவது கிளியா... (பணத்தோட்டம்), 40. பொன் எழில் பூத்தது புது வானில்... (படித்தால் மட்டும் போதுமா), 41. போனால் போகட்டும் போடா... (பாலும் பழமும்), 42. பூ மழை தூவி... (நினைத்ததை முடிப்பவன்), 43. போயும் போயும் மனிதனுக்கு... (தாயை காத்த தனயன்), 44. ராஜாவின் பார்வை... (அன்பே வா), 45. சட்டி சுட்டதாடா... (ஆலயமணி), 46. சிலர் சிரிப்பார்... (பாவ மன்னிப்பு) , 47. சொல்லாதே யாரும் கேட்டால்... (சொர்க்கம்), 48. சோதனை மேல் சோதனை... (தங்கப்பதக்கம்), 49. தாய் மேல் ஆணை... (நான் ஆணையிட்டால்), 50. தம்பிக்கு ஒரு பாட்டு... (நான் ஏன் பிறந்தேன்), 51. கரைமேல் பிறக்க வைத்தாய்... (படகோட்டி), 52. தூங்காதே தம்பி தூங்காதே... (நாடோடி மன்னன்), 53. உலகம் பிறந்தது எனக்காக... (பாசம், 54. உழைக்கும் கைகளே... (தனிப்பிறவி), 55. உன் கண்ணில் நீர் வழிந்தால்... (வியட்நாம் வீடு), 56. உன்னை பார்த்து இந்த உலகம்... (அடிமைப்பெண்), 57. வாழ்ந்து பார்க்க வேண்டும்... (சாந்தி), 58. யாரது யாரது தங்கமா... (என் கடமை), 59. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்... (மலைக்கள்ளன்), 60. ஹலோ ஹலோ சுகமா... (என் கடமை), 61. அவள் பறந்து போனாளே... (பார் மகளே பார்), 62. செல்லக்கிளிகளாம்... (எங்க மாமா), 63. தேவனே என்னை பாருங்கள்... (ஞான ஒளி), 64. ஐம்பதிலும் ஆசை வரும்... (ரிஷிமூலம்), 65. அண்ணன் என்னடா... (பழனி), 66. அவள் பறந்து போனாலே... (பார் மகளே பார்), 67. ஒரு பக்கம் பாக்குற... (மாட்டுக்கார வேலன்), 68. தர்மம் தலைகாக்கும்... (தர்மம் தலைகாக்கும்), 69. என்னை யாரென்று... (பாலும் பழமும்), 70. இப்படித்தான் இருக்க வேண்டும்.. (விவசாயி), 71. கடலோரம் வாங்கிய காற்று... (ரிக்ஷாக்காரன்), 72. கடவுள் செய்த... (நாடோடி), 73. காதல் ராஜ்ஜியம்... (மன்னவன் வந்தான்டி), 74. கட்டொடு குழலோடு ஆட... (பெரிய இடத்து பெண்), 75. காவேரி கரையிருக்கு... (தாயை காத்த தனயன்), 76. அவளுக்கு என்ன... (சர்வர் சுந்தரம்), 77. கேளம்மா சின்னம்மா... (கன்னித்தாய்), 78. குறுக்கு வழியில்... (மகாதேவி), 79. மன்னிக்க தெரியலையா... (தேடிவந்த மாப்பிள்ளை), 80. மாதவி பொன்... (இரு மலர்கள்), 81. மன்னிக்க வேண்டுகிறேன்... (இரு மலர்கள்), 82. முத்தை திரு... (அருணகிரிநாதர்), 83. நாளொரு மேடை..., 84. நான் மலரோடு தனியாக... (இரு வல்லவர்கள்), 85. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்... (அன்பே வா), 86. நேரமிது நேரமிது... (ரிஷிமூலம்), 87. நிலவை பார்த்து வானம் சொன்னது (சவாளே சமாளி), 88. ஒரே பாடல்... (எங்கிருந்தோ வந்தான்), 89. ஒரு தாய்... (பணக்கார குடும்பம்), 90. ஒரு தரம்... (சுமதி என் சுந்தரி), 91. பாட்டுக்கு பாட்டெடுத்து... (படகோட்டி), 92. பாட்டும் நானே பாவமும் நானே... (திருவிளையாடல்), 93. படைத்தானே... (நிச்சய தாம்பூலம்), 94. பாலக்காட்டு பக்கத்திலே... (வியட்நாம் வீடு), 95. பொன்னை விரும்பும்... (ஆலயமணி), 96. செந்தமிழ் பாடும்... (வைர நெஞ்சம்), 97. சிவப்புக் கல்... (எல்லோரும் நல்லவர்களே), 98. தேடினேன் வந்தது... (இதய வீணை), 99. திருடாதே பாப்பா திருடாதே..., 100. யாருக்காக யாருக்காக... (வசந்தமாளிகை) .......
அவரது பக்தி பாடல்கள் சில...
* அழகென்ற சொல்லுக்கு முருகா..., * உள்ளம் உருகுதய்யா..., * கற்பனை என்றாலும்..., * முருகனை கூப்பிட்டு..., * சொல்லாத நாளில்லை..., * அன்று கேட்பவன்..., * எந்தன் குரலில்..., * கற்பனை என்றாலும்..., * மண்ணாலும் திருச்செந்தூரில்..., * உன்னை பாடும் மொழியின்றி..., * மருதமலைக்கு..., * திருச்செந்தூரின் கடலோரத்தில்...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.