1929 இல் செய்யப்படிருந்த அன்னபூரணியின் நீளம் 90 அடி (133 அடி நீளம்). அனால் இப்போதைய பிந்தைய கப்பல்களின் நீளம் 1310 அடி. ஆகாய விமானகளும் இரு தட்டுக்களுடன் வரத்தொடங்குகின்றன. சீனாவில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட புகையிரதத்தின் வேகம் ஆகாய விமானகளைக் கலைக்கும் அளவிற்குள்ளது.
Modem, ADSL, Wi-Fi, Bluetooth, 4G, Smart phone, i Phone, Skype, free call என்று தொடர்பு எங்கோ சென்று விட்டது. உங்கள் நிகழ்வுகளின் காணொளிகளை அடுத்த நிமிடத்தில் விரும்பியவர்கள் பார்க்க கூடிய வசதி. MS office 2003, 2007 தொடங்கி 2010 ற்கு வந்துவிட்டது. Windows தமது அடுத்த வெளியீட்டுக்குத் தயாராகலாம்.
Cancer நோயாளிகளை வீட்டில் இருந்தே கவனித்துக் கொள்ளக் கூடிய வகையில், 'Tablets' எனப்படும் சிறிய கணனி மூலம் வைத்திய வசதிகளுக்கு ஜப்பானில் முயற்சி என 'Japan times' இல் (27-05-13) இல் தெரிவித்துள்ளது.
ஏன் தமிழ் சினிமாவும் எங்கோ முன்னேறிவிட்டது. எந்திரன், தசாவதாரம் போன்ற படங்களில் பிரமாண்டங்களைக் காட்டி பிரமிக்கவைக்கின்றார்கள்.
இவை எல்லாம் சொல்லும் செய்தி ஒன்றுதான். கல்வி மற்றும் அதனுடன் கூடிய அறிவியலின் அதி உயர் வளர்ச்சி. இவை இத்துடன் நிற்கப் போவதில்லை. அடிப்படைகல்வி மற்றும் உயர்கல்விகளின் தரங்கள் மிகவும் உயர்ந்துள்ளன. இவைகள் இன்னும் எங்கேயோ போகப்போகின்றன.
ஆனால் இங்கு வல்வையில் க .பொ. த (ச /த ) - பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் பலர், பரீட்சையில் சித்தி பெறத் தவறி, தமது எதிர் காலத்தைத் தொலைத்து நிற்கின்றார்கள், இதுவும் தாய் மொழியில் தோற்றியவர்கள். சிலர் ஒருவாறு கோட்டைத் தாண்டியுள்ளார்கள்.
எத்தனை, எங்கே, எப்படி போன்றவற்றைத் தவிர்ப்போம். ஏனென்றால் இவை இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு அப்பாற்பட்டவை.
ஒப்பிடும் பொழுது சற்றுப்பாரமான க .பொ .த (உ /த ) தரத்தின் சித்தியை வைத்தே ஒன்றும் செய்யமுடியாத நிலையில், க .பொ .த (ச /த ) இன் சித்திக்கு கீழ் உள்ளவர்களின் பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றி எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை.
ஒருகணம் சிந்திப்போம், இவர்களில் ஒருவர் எமது மகனாகவோ, மகளாகவோ, தங்கையாகவோ, தம்பியாகவோ இருந்தால் எப்படித் துடித்துப் போவோம். அடுத்தமுறை பரீட்சைக்குத் தோற்றாலாமே என்று ------ வேண்டாம் இதுவல்ல இதற்குரிய நிரந்தர விடை.
பரீட்சையில் வென்ற சில மற்றும் பல மாணவர்களினால் ஏற்பட்ட எழுச்சி நிச்சியம் சந்தோசப்படவேண்டியொன்றுதான் . இதற்காக உழைத்த அனைவரும் போற்றப்படவேண்டும். ஆனால் பரீட்சியில் தோற்ற மாணவர்களின் (அது ஒருவர் என்றால் கூட ) விடயம் தான் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியவொன்று.
பரீட்சையில் சித்தியடைவது ஒரு சாதாரணமான நிகழ்வு. இதற்காகத்தான் அரசாங்கம் கல்விக் கூடங்களை அமைத்துள்ளது ஆனால் பரீட்சையில் தோற்பது ஒரு துக்ககரமான நிகழ்வு.
ஏவுகணைகளை விடுவதில் கோளறு என்றாலும் சரி, விஞ்ஞான ஆராச்சிகளில் எதிர்பார்த்த வெற்றிவராத போதும், ஏன் ஒரு இராணுவத் தாக்குதலில் ஏற்பட்டும் தோல்விகள் போன்றவற்றில் எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் தாம் விடும் ஓரிரு பிழைகளைத்தான் ஆலசி ஆராய்கின்றார்கள்.
இங்கும் நாம் பிரஸ்தபிப்பதும் வல்வையில் இம்முறை க.பொ. த (ச/த ) சித்திப்பெறாமல் எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் மாணவர்களைப் பற்றித்தான்.
தலைநகரில் அடித்துப் படித்து ஆங்கில மொழியில் பிள்ளையை பரீட்சைக்கு அனுப்பி, அதிலும் பிள்ளை சகமாணவரை விட 1A குறைந்தால் கூட அடிபடும் தாய்மார்கள் எங்கே. இங்கு தமிழ் மொழியில் சித்தி பெறத் தவறிய பிள்ளைகளின் தாய்மார்கள் எங்கே.
அண்மையில் வெளியாகியிருந்த சாட்டை திரைப்படத்தில் (கல்வி பால் அக்கறை காட்டாத அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்), நடிகர் சமுத்ரகனி ஒன்றைக் கூறுவர். " இங்கு கிராமத்தில் பரீட்சையில் தமிழ் மொழியில் தேறி அதிஉயர் புள்ளிகள் பெற்று 1 ஆம், 2ஆம் இடம் வரும் மாணவர்களே கூட, நகரங்களில் ஆங்கில மொழியில் படித்து , பரீட்சையில் சாதாரண சித்தி பெறும் மாணவர்களுடனேயே போட்டி போடத் திண்ருகின்றார்கள்" என்று.
தமிழகத்தில் என்றாலும் கூட மேற்கூறப்பட்டது உண்மைதான் .
இது இப்படியிருக்க இங்கு சித்தியே பெறாத மாணவர்களின் எதிர்காலம் எப்படித்தான் இருக்கப்போகின்றது.
இதுவரை வல்வையில், பரீட்சையில் சித்திபெறத் தவறுபவர்களின் புகலிடம் வெளிநாடு அல்லது கப்பல். ஆனால் இப்பொழுது வெளிநாடுகளின் கதவுகள் சற்று இறுக்க மூடப் பட்டுள்ளன. உள் நுழைவது கடினமாகிவிட்டது.
கப்பல் - "கவுண்ட மாதிரித்தான்" என்பார்கள். இது தான் நிகழ்ந்துள்ளது. கப்பல் வேலைகளுக்கு குறைந்த பட்ச தகுதியாக க.பொ.த (ச /த ) சித்தியை கட்டயமாக்கியுள்ளது இலங்கை அரசு, இதில் அங்கிலம் கட்டாய பாடம் வேறு .
அப்படி என்றால் இந்த மாணவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள். சித்திபெறத் தவறிய மாணவிகள், ஒருவேளை மீண்டும் பரீட்சைக்குத் தோற்றலாம் அல்லது தாழ்வு மனப்பான்மையுடன் வீட்டுக்குள்ளேயே தங்கி விடுவார்கள் திருமணம்வரை - கொடுமை.
படிக்காதவர்களாக இருந்து அசாத்தியவர்கள் இருகின்றார்கள்தான். ஆனால் அது பெருந்தகை காமராஜர் போன்ற ஒரு சிலரே.
கல்வியின் சிறந்தவனை உலகம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும். அண்மையில், துன்னாலையைச் சேர்ந்த ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர் திரு. பாலகணேஷ், நீண்ட கால சுகவீனத்தின் பின் மரணமானார். விளையாட்டுப் பையன், ஆனால் படிப்பில் புலி. 1987 இல் எல்லாப் பாடங்களிலும் D எடுத்திருந்த இவர், அந்த வருடத்திலேயே கண்டு பிடிக்க முடியாத நோய்க்கு ஆளாகியிருந்திருந்தார். அதன் பின்னர் இவர் வீட்டை விட்டு வந்ததில்லை. ஆனால் இவரின் மரணம் ஹாட்லி கல்லூரி வட்டாரத்தில் மிகவும் பேசப்பட்டிருந்தது.
ஏன் வல்வையை சேர்ந்த, தற்பொழுது லண்டனில் வசிக்கும் ஒரு மாணவ நண்பர் (ஒரே வகுப்பில் படித்திருக்கவில்லை), பாலகணேஷின் மறைவு பற்றி பின்வருமாறு, ஒரு குழு மின்னஞ்சலில் தெருவித்திருந்தார். 'A talented lad in 90 batch'. இதைக் கூறியிருந்தவர் படிப்பில் இன்னொரு கெட்டிக்காரர். கல்வி பாலகணேஷ்ப் பற்றி பேசவைத்தது.
நல்ல படிப்பு, நல்ல வேலை உள்ளவர்களைத்தான் சமூகம் கண்டு கொள்ளும், இது எங்கும் உள்ள யதார்த்தம். நன்றாக ஓடும் குதிரையில் தான் பணம் கட்டுவார்கள். இதற்கு தமன்னாவும் விதிவிலக்கல்ல. பரீட்சையில் சித்திபெறத் தவறியவர்களும் விதிவிலக்கல்ல.
ஆனால் நாம் எல்லோரும் இதற்கு மாறாக, பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்களை எப்பாடுபட்டாவது சமூகத்தின் சாதாரண நீரோட்டத்திற்காவது கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.
அத்துடன் இனிமேல் வரும் காலங்களில் அணைத்து மாணவர்களையும் க.பொ .த (ச/த) இல் சித்தியடையச் செய்யவேண்டும் .
Root cause analysis
இதற்காக, ஏன் இங்கு மாணவர்கள் பரீட்சையில் தவறுகின்றார்கள் என்பதைக் கண்டறியவேண்டும். இதற்குரிய "அடிப்படை காரணங்களை ஆராய்தல்" (root cause analysis) என்பது செய்து, அதில் உள்ள காரணங்கள் திருத்தப்படவேண்டும். ஆனால் இங்கு இப்போது இது செய்யக்கூடிய சாத்தியங்கள் இல்லை, அத்துடன் இதற்கு ஒருவரும் முன்வரப்போவதுமில்லை.
ஆகவே இப்போது உள்ள ஒரே வழி, "நொந்தாலும் அவள் தான் பிள்ளை பெறவேண்டும்" என்பதற்கமைய மாணவர்களே ஆபத்தினை உணர்ந்து படிக்க வேண்டும். இது பற்றி பெற்றோர்கள், அயலவர்கள், உற்றார் மற்றும் உறவினர்கள் எடுத்துரைக்கவேண்டும். அத்துடன் பரீட்சை காலங்களிலாவது ஒலிபெருக்கிகளின் அலறல்களைக் குறைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தவறி, மாணவர்கள் பரீட்சையில் தவறும் பட்சத்தில், இவர்களிற்காக கூறக் கூடியது இது ஒன்றுதான் - பாவம் இவர்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.