தொண்டைமானாற்று புதிய பாலத்தின் வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2013 (திங்கட்கிழமை)
தொண்டைமானாற்று புதிய பாலத்தின் இருபக்க வீதிகளும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இவ் வேலைகள் வரும் 20 ஆம் திகதி பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தொண்டைமனாற்றுப் பாலம் ஆனது யாழ்பாணத்தின் B 75 பாதையான யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது. இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கின்றது.
கடந்த கால உள்நாட்டுப்போரின் போது மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்பெற்ற இந்தப்பாலம் 1985 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் எதிபாராத வகையில் குண்டு வைத்து சேதமாக்கப்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டு முற்றாகவும் சேதமடைந்திருந்தது.
வல்வெட்டித்துறை தொண்டைமனாற்றிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.