முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம் வரும் ஆவணியில் திறக்கப்படவுள்ளது. முதலாவது திருமணத்துக்கான பதிவும் செய்யப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தர்மகர்த்த சபையினரால், வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ''ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்'' ஆனது எதிர்வரும் ஆவணி மாதம் திறக்கப்படவுள்ளதாக நிர்வாக சபையினர் valvettithurai.org ற்குத் தெரிவித்துள்ளனர்.
(அமையவுள்ள கல்யாண மண்டபத்தின் மாதிரித் தோற்றம் கலாச்சார மண்டபம் அல்ல என தர்மகர்த்தா சபையினர் தெரிவித்துள்ளனர் )
கடந்த கார்த்திகை மாதம் 23 ஆம் திகதி அடிக்கல் நாட்டு வைபவத்துடன் ஆரம்பித்த இக்கல்யாண மண்டப நிர்மான வேலை படத்தில் காட்டப்பட்டது போல் குறிப்பிடத்தக்களவு பூர்த்தியடைந்து வருகின்றது.
திருமண மேடை
சுமார் 400 தொடக்கம் 500 பேர் வரை அமரக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ள இம்மண்டபம் 'Balcony' யையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அழகான பாக்கு நீரிணையின் காட்சியையும், அருகில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை அம்மன் மற்றும் சிவன் ஆலயங்களின் அழகான தோற்றத்தையும் பார்க்கக் கூடிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நவீன வேலைப்பாடுகளுடன் அமைகின்ற இம்மண்டபத்தின் நிகழ்வுகளை வெளியிலிருந்தும் பார்க்கக் கூடிய வண்ணம் வடிவமைக்கப்படுவது சிறப்புடன் குறிப்பிடத்தக்கது.
வல்வையில் முதலாவதாக அமையவுள்ள இக்கல்யாண மண்டபத்தில், முதலாவதாக நடைபெறவுள்ள திருமணத்துக்கான பதிவிற்கு தேவஸ்தான தர்மகர்த்த சபையினரிடம் நாடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
தவில் நாதஸ்வர மேடை
மணப்பெண் அலங்கார அறை
Balcony யிலிருந்தான தோற்றம்
மேல்தட்டுக்கான படிக்கட்டுகள்
கப்பலுடையவர் கோவில் மற்றும் விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் தோற்றம்
பாக்கு நீரிணையின் தோற்றம்
வல்வை அம்மன் மற்றும் சிவன் ஆலயங்களின் தோற்றம்
View from KKS - Point pedro road
தற்பொழுது முற்று முழுதாக பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நிர்மாணத்துக்கு பொதுமக்கள் தொடர்ந்தும் உதுவுவதாகக் தெரிவித்துள்ள தர்மகர்த்த சபையினர், அண்மையில் அன்பர் ஒருவர் மண்டபத்துக்குத் தேவையான கதிரைகளை அன்பளிப்புச் செய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், தொடந்தும் பொது மக்கள் தம்மாலான பங்களிப்பை வேண்டியுள்ளனர்.
தற்பொழுது வல்வெட்டித்துறையிலிருந்து அண்மையாக திக்கம் மற்றும் தொண்டைமனாற்றுப் பகுதிகளில் தலா ஒவ்வொரு கல்யாண மண்டபம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.