இன்னுமொரு அன்னபூரணியா? 3வது பாகம் (இறுதிப் பாகம்) - வல்வையில் கப்பல் கட்டுவதற்கான 'அரசாங்க உதவிகள்'? - கலங்கரை விளக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/06/2013 (வெள்ளிக்கிழமை)
இன்னுமொரு அன்னபூரணியா? 3வது பாகம் (இறுதிப் பாகம்) - வல்வையில் கப்பல் கட்டுவதற்கான 'அரசாங்க உதவிகள்'?
எனது முதலாவது கட்டுரையில், கடந்த எழுபத்தஐந்து வருடகாலத்தல் கப்பல் கட்டுவதற்கு அதிமுக்கிய காரணங்களாகிய 'கப்பல் கட்டும் தேவை' மற்றும் 'அரசாங்க உதவி' என்பவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது பற்றியும் மற்றயை பல காரணங்களில் வல்வையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் பார்த்தோம்.
இரண்டாவது கட்டுரையில் இங்கு வல்வையில் நவீன 'கப்பல்கள் கட்டுவதற்கான தேவைகள்' என்ன உள்ளன என்று பார்த்தோம்.
இந்த முன்றாவது கட்டுரையில் 'அரசாங்க உதவிகள்' என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்கின்றேன்.
அரசாங்க உதவி என்றதும் அனேகரின் கேள்வி அரசாங்கம் எங்கே உதவி செய்யப் போகின்றது அதுவும் கப்பல் கட்டுவதற்கு என்றுமே உதவியதில்லை!
நாடு இருக்கும் நிலையில் 'அரசாங்கத்தின் கெடுபிடிகள் இல்லாவிட்டாலே போதும்', என்று அனைவரும் எண்ணுகின்றனர்.
உண்மைதான்! கடந்த சில வருடங்களாக இலங்கைத் தீவின் மற்றைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வல்வையில் ஆதரவென்பது மிகக் குறைந்த அளவில்தான் கிடைத்துள்ளது.
இந்தக் கட்டுரை எமது வல்வை மக்களின் மனங்களை நன்கறிந்து கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்களையும் மனதில் கொண்டு ஒரு நடுநிலையில் நின்று எழுதப்பட்டுள்ளது!
கெடுபிடிகள்
அரசாங்க ஆதரவு கிடைக்க முன்னர் கெடுபிடிகளைத் தவிர்த்தல் வேண்டும். எனவே கெடுபிடிகளை எப்படித் தவிர்ப்பது என்பதை முதலில் பார்ப்போம்!
கெடுபிடிகள் என்றால் என்ன? அது ஏன் உருவாகியுள்ளது?
பொறுப்பற்ற உத்தியோகத்தவர்களின் கெடுபிடிகள்!
பொறுப்பான ஊழியர்கள் சிலர் கொள்கைகளை சரிவர சீர்தூக்கிப் பாராது வேலைக்கு வந்தோம் போனோம் என்று பணிபுரிகின்றனர். அங்கே மக்களின் கஸ்டங்களைப் பெரிதகாப் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளாதவர்கள்!
அரசாங்கம் அதாவது மேல்மட்டத்தில் இருப்போர் ஏன் கெடுபிடியாக இருக்கின்றனர்? அதற்கு முக்கியமாக காரணங்கள் உள்ளன:
•முதலாவதாக, திரும்பவும் நாட்டில் வன்முறை தோன்றக் கூடாது! இளைஞர்கள் வன்முறையில் இறங்கக் கூடாது!
•நாட்டில் உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். அதிகரித்தால்தான் மக்களுக்கு சுபீட்சம் உருவாகும்.
வேறும் பல காரணங்கள் இருக்கலாம்.
கெடுபிடிகளை எப்படித் தவிர்ப்பது?
எங்களின் உறுதியான கொள்கை, மனப்பாங்கு ஆகிவற்றினால் காலப்போக்கில் கீழ்மட்ட கெடுபிடிகளைத் தவிர்க்கலாம்.
அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கும் மேற்கூறிய இரு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த ஒரு ஸ்தாபனத்திற்கும் அரசாங்க (மேல்) மட்டத்தில் கெடுபிடிகள் ஏற்படமாட்டா. முதலில் அப்படி கெடுபிடிகள் ஏற்பட்டாலும் படிப்படியாக அவை குறைந்து இல்லாது போய்விடுவது நிச்சயம். ஏனெனில் அவர்களுக்கு உள்நாட்டில் உற்பத்தி கிடைக்கின்றது. ஏற்றுமதி செய்யும் இடத்தில் வெளிநாட்டு ஏற்றுமதி செலாவணி உருவாகுகிறது. அவர்களுக்கு பாதிப்பின்றி பலன் கிடைக்கிறது என்று உணரும்போது உதவியும் செய்ய முற்படுவர். சிறிது காலம் செல்லும்.
அரசாங்க உதவி
இது வரை கெடுபிடிகளை எப்படித்தவிர்ப்பது என்பதைப் பார்த்தோம். இனி அரசாங்க ஆதரவை எப்படிப் பெறாலாம் என்று ஆராய்வோம்.
வாசகர்கள் அனைவரும் உடனே சந்தேகத்துடன் கேட்பது அரசாங்கத்தின் உதவியா? மிகவும் கஸ்டமான விடயம்! உண்மையாக இருக்கலாம்! அதை வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!
கெடுபிடிகளைத் தவிர்ப்பதற்கு உதவி கேட்பது ஒரு முறை! சற்று சிந்தித்துப் பாருங்கள், அரசாங்க உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனத்தில் கீழ்மட்ட கெடுபிடிகள் மிகவும் குறைவாகக் காணலாம்.
அரசாங்க உதவி கேட்கும் போது:
•ஸ்தாபனங்களின் மேலுள்ள சந்தேகங்கள் குறையும்.
•அரசாங்கத்துடன் பகமை குறையும் அதனால் கெடுபிடிகள் குறையும்.
•நம்பிக்கை கூடும். வன்முறையில் இறங்கவில்லை என்ற நம்பிக்கை கூடும்.
•இளைஞர்கள் நல்வழியில் செல்கிறார்கள் என்ற நல்லெண்ணம் அதிகரிக்கும்.
•நாட்டில் உற்பத்தி பெருக வழி உள்ளது. தமது அரசாங்கத்திற்கு நன்மை என்று எண்ணுவர்.
•உதவி கேட்கும் போது உதவி கிடைத்தால் நல்லது. கிடைக்காது விட்;டாலும் அதனால் கேட்பவர்களுக்கு ஒரு நட்டமும் இல்லை. ஆனால் நீங்கள் அரசாங்கத்துடன் வர்த்தகரீதியாக இணைய விரும்புகிறீர்கள் என மறைமுகமாக உணர்த்துகிறீர்கள்.
வேறும் பல மறைமுகமான நன்மைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.
இங்கு வாசகர்கள் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய அம்சம், 'அரசாங்க (வர்த்தக ரீதியான) உதவி கேட்பதற்கும் அடிபணிவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது' என்பதே!
அரசாங்க உதவியை எப்படி பெறுவது?
பல அரசாங்க உதவிகள் இருந்தும் அது பற்றி அறியாதலால் அத்தகைய உதவிகள் கிடையாமலே போய்விடும். அது பற்றி அறிவதற்கு:
•அரசாங்க அதிபர்களை அணுகலாம்.
•நகர பிதா (நகரசபைத் தலைவர்) அல்லது நகரசபை அதிகாரிகளைக் கேட்கலாம்.
•அரசாங்க அலுவலகங்களில் வர்த்தமானிகளின் மூலம் அறியலாம்.
•அரசாங்க துறைகளில் (உதாரணமாக படகு கட்டுவற்காய உதவி பற்றி மீன்பிடித் துறை யில்) அறியலாம்.
•கொழும்பில் அரசாங்கத்துடன் தொடர்புகளை உடைய நல்ல பல பிரத்தியோக தமிழ் ஸ்தாபனங்கள் உள்ளன. அவைகளுடன் கூட்டாக வர்த்தகம் செய்யும் போது அரசாங்க ஆதரவு (அல்லது கெடுபிடியின்மை) உண்டாகலாம்.
•ஊரில் உள்ள பிரமுகர்கள் உதவியை நாடலாம்.
•இணையத்தளங்கள் மூலம் அறியலாம்.
வல்வை மக்களே சிந்தித்துப் பாருங்கள்!
அரசாங்க ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கருமமாற்றுவோம்.
அது கிடைக்கவில்லை என்றால், ஆகக்குறைந்தது என்ன நடந்து விடப்போகின்றது?
வல்வையில் படகு கட்டுவதற்கு விண்ணப்பித்த அனைத்துக்கும் மறுத்து அரசாங்கம் ஒரு உதவியும் செய்யவில்லை! அதுமாத்திரமன்றி கெடுபிடிகளையும் குறைக்கவில்லை!
இதுதான் நடக்கும் அப்படி நடந்து விட்டால் கூட அங்கே ஒரு விதமான பாதிப்பும் இல்லை!
வல்வையர்களாகிய எங்கள் இரத்தத்தில் ஓடும் கப்பற்றுறையை இத்தகைய பின்னடைவுகள் குறைத்து விடமாட்டா! உறங்கிக் கொண்டிருக்கும் கப்பற்றுறை வளர வேண்டும் என்று வல்வையர் நினைத்தாலே போதுமானது.
•பாலர் பாடசாலையில் விளையாட்டுப் படகு செய்வதைக் கற்றுக் கொடுக்கலாம்!
•படகு கட்டுமானப் புத்தகங்கள் பாடசாலையில் படிக்கலாம்!
•பாடசாலைகளில் படகு கட்டுவதை ஒரு தொழிற்கல்வியாக ஆரம்பிக்கலாம்!
•படிப்பகங்களில் படகு கட்டும் புத்தகங்களையும் ஆவண்ங்களையும் பார்வைக்கு வைக்கலாம்!
•தனியார் பாடசாலைகளிலும் தொழிற்கல்வியைத் தொடங்கி கண்ணாடி இழைகளினாலான படகள் கட்டுமானம், மரவேலை, படவரைதல், இயந்திரவியல் போன்ற பாடங்களை கற்பிக்கலாம்.
•வீட்டு வளவில் 5 அடி நீளமான படகை செய்து பார்க்கலாம் அதையே 8 அடி நீளமானதாக செய்தால் ஒருவர் செல்லும் படகாக கட்டி விற்றும் விடக்கூடய வாய்ப்புக்கள் ஏற்படலாம்.
பச்சைக் கிளி வாங்க முன்னர் கிளிக்கு ஒரு கூடு வாங்குதல் வேண்டும்! கிளியை வாங்கியபின்னர் கூடுவாங்குவோம் என்று நினைப்பது மடமை!
நாங்கள் படகுகட்டுவதற்கான அடிப்படை அறிவை வளர்த்தல் வேண்டும். காலம் மாறி சந்தர்ப்பம் எங்கள் பாக்கம் வரும் போது அந்தத் திறமையை உடனடியாப் பாவிக்க முடியும். வல்வையில் படகு கட்டக் கூடிய சந்தர்ப்பம் வரும் போது நாம் கட்டக் கூடிய தகமைகளுடன் பலத்துடன் தயாராக இருப்போம்! காலம் வரும்வரை திறமையை வளர்ப்பதற்கு காத்திருக்கத் தேவையில்லை.
எங்கள் முக்கிய நோக்கம் என்ன?
'உலக தாரதரத்திற்கு ஏற்ப படகுகளைக் கட்டப் பழகுதல்'.
இந்த நோக்கத்தில் நாங்கள் உறுதியாகிவிட்டால், தடைகள் (அரசாங்கத்தின் கெடுபிடிகள் உட்பட) அனைத்தையும் உடைத்தெறிந்து விடலாம்!
நீங்கள் சிந்தனை செய்யத் தொடங்கிவிட்டீர்கள்! படகு கட்டுவதற்காய உபாயங்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள்!
இங்கு நீங்கள் எனறு மேலே கூறியிருப்பது வேறு யாரும் அல்ல!
•வாழ்க்கையை தொடங்கி திறம்பட வாழ நினைக்கும் வல்வை இளைஞர்கள்!
•அன்னபூரணி பற்றி எழுதி, விழாக்கள் கொண்டாடி, வல்வை மக்களை சிந்திக்க வைக்கும், ஊக்கமூட்டும் புத்திஐPவிகள்!
•சமூகக் குழுக்களும் அங்கத்தவர்களும்!
•வல்வையை செல்வம் கொழிக்கும் ஊராக மாற்றத் துடிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள்!
•நாட்டு நிலமையில் என்னசெய்வது என்று நடுநிலையில் நின்று பார்க்கும் பாமர மக்கள்!
அனவைருமே ஏதோ ஒரு விதத்தில் சிந்திக்கலாம்! உங்களின் சிந்தனையின் அடிப்படையில்:
படகு கட்டடுவது பற்றி மேலதிக விபரங்கள்.
இது பற்றி தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள்
படகு கட்டத் தேவையான படிப்பு வசதிகள்
படகு கட்டுவதற்கான வரைபடங்கள்
எதுவாயினும் துணிந்து கேளுங்கள்! கதவு தட்டப்பட்டால்தான் திறக்கப்படும். அதுவரை திறக்கப்படமாட்டாது! அன்னபூரணி ஆண்டுவிழா தொடர்ந்து கொண்டாடிக் கொண்டே இருக்காது அவர்களின் மனத்துணிவும் உழைப்பும் வல்வை இளைஞர்களுக்கு வரவேண்டும். வரும்!
நன்றி! வணக்கம்!!
கலங்கரைவிளக்கம்.
தொடர்பு கொள்ளவேண்டிய எனது மின்னஞ்சல்:kalankaraivilakam@gmail.com
எமது குறிப்பு
1) Photos by Valvettithurai.org, taken in a foreign ship yard.
2) கட்டுரையாளர் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல், தனது பெயரைக்குறிப்பிடவில்லை. இது எமக்கு ஏற்புடையதன்று. ஆனாலும் கட்டுரையின் கருப்பொருளின் தன்மை கருதி, கட்டுரையில் இருந்த சில சர்ச்சைக்குரிய சில வரிகள் நீக்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றது.
ஆனாலும் இனிமேல் புனைபெயரில் வரும் கட்டுரைகள் பிரசுரிக்கப்படமாட்டாது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.