நாளைய கூட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குஅரசினால் வழங்கப்பட்டுள்ள சலுகை பிரஸ்தாபிக்கப்படும், கடற் தொழிலாளர்களுக்கும் அழைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் CINEC (Colombo International Nautical and Engineering College) யாழ் கிளை இணைந்து கப்பற்துறை சம்பந்தமான கருத்தரங்கு ஒன்றை நாளை காலை 0900 மணியளவில் வல்வெட்டித்துறை மத்திய நவீன சந்தை கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் நடாத்தவுள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள CDC எடுப்பதில் வழங்கப்பட்டுள்ள சலுகை பற்றி எடுத்துரைக்கப்படும் என அறியமுடிகின்றது. CDC (Continuous Discharge Certificate - மாலுமிகள் சான்றிதழ்) பெறுவதற்கு க.பொ.த (சா/த) ஐ இலங்கை அரசாங்கம் தற்பொழுது கட்டாயம் ஆக்கியுள்ளது.
ஆனாலும் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு அரசினால் இத் தகமை இவ்வருட இறுதி வரை விதிவிலக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது CDC யை க.பொ.த (சா/த) தகமைகள் இல்லாமலேயே பெறமுடியும்.
நடைபெறவுள்ள கருத்தரங்கிற்கு கடற் தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.