Vaiswa, மற்றும் யாழ் CINEC இணைந்து நடாத்திய கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2013 (திங்கட்கிழமை)
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் CINEC (Colombo International Nautical and Engineering College) யாழ் கிளை இணைந்து கப்பற்துறை சம்பந்தமான கருத்தரங்கு ஒன்றை நேற்று முந்தினம் காலை 0930 மணியளவில் வல்வெட்டித்துறை மத்திய நவீன சந்தை கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் நடாத்தியிருந்தனர்.
பேராசிரியர் திரு.சபா இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், CINEC சார்பாக CINEC யாழ் கிளையின் முகாமையாளர் திரு.இலங்கேஸ்வரனும், Vaiswa சார்பில் அதன் தலைவர் திரு.ரஞ்சனதாஸ், இணைப்பாளர் திரு.சீவரத்தினம் ஆகியோரும் சிறப்புப் பேச்சாளாராக Capt.வைத்திய குமார் அவர்களும், மற்றும் Capt.பாஸ்கரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்தரங்கில் பேசப்பட்ட மற்றும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பின்வருமாறு,
* வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள CDC எடுப்பதில் வழங்கப்பட்டுள்ள சலுகை 2013 ஆம் ஆண்டு இறுதியில் முடிவடைதல் [CDC (Continuous Discharge Certificate - மாலுமிகள் சான்றிதழ்) பெறுவதற்கு க.பொ.த (சா/த) ஐ இலங்கை அரசாங்கம் தற்பொழுது கட்டாயம் ஆக்கியுள்ளது]
*வேலைவாய்ப்பில் உள்ள தாமதங்கள்.
* சுன்னாகம் மின் பிறப்பாக்கி நிலையத்தில் உள்ள சாத்தியமான வேலை வாய்ப்பு மற்றும் சான்றிதழ் பெறுதல்.
* துறைமுகங்களில் பயிற்சி பெரும் நோக்கில் வேலை பெறுதல்.
* CINEC (யாழ் கிளையில் எதிர்வரும் நாட்களில் ஆரம்பமாகவுள்ள வகுப்புக்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.