யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான யாழ் மாவட்ட அரச அதிபர் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டி யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது.
இந்த அரையிறுதி ஆட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலக அணியை எதிர்த்து ஊர்காவற்துறை பிரதேச செயலக அணி மோதியது. இப் போட்டியில் ஊர்காவற்துறை பிரதேச செயலக அணி முதற் பாதியிலேயே 2 கோல்களை பெற்று ஆட்டத்தின் போக்கை மாற்ற முயன்றது. இருப்பினும் பிற்பாதியில் சுதாரித்துக் கொண்ட பருத்தித்துறை பிரதேச செயலக அணி 2 கோல்களை பெற்று ஆட்டத்தைச் சமம் செய்தது. பருத்தித்துறை பிரதேச செயலக வீரர் காண்டீபன் இவ்விரு கோல்களையும் பெற்றிருந்தார்.
இறுதியில் வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையினை முறையாகப் பயன்படுத்திய ஊர்காவற்துறை பிரதேச செயலக அணி வெற்றி பெற்று மாவட்ட மட்ட உதைப்பந்தாட்ட சுற்றின் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.