கப்பலுடையவர் கோயில் திருவிழா நேற்று நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் இரவுத்திருவிழா - படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள கப்பலுடையவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று காலை 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. இரவுத்திருவிழா மாலை 07.00 மணியளவில் பூசைகள் நடைபெற்று பிள்ளையார் வீதி உலா வந்தார்.
இவ் வருடாந்த மகோற்சவத்தின் பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந்த மகோற்சவத்தின் பூங்காவன திருவிழா 03.08.2013 அன்றும், தீர்த்தத் திருவிழா 06.08.2013 அன்றும் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை கப்பலுடையவர் பிள்ளையார் ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து மேற்கு திசையில் சுமார் 350m தொலைவில் அமைந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.