மழையின் மத்தியிலும் வீதியினை கலகலப்பாக்கிய இன்றைய காலை விளையாட்டுக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2013 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவையொட்டிய, இரண்டாம் நாள் விளையாட்டுப்போட்டிகள் இன்று காலை நெடியகாடு பிள்ளையார் கோவில் பகுதியிலிருந்து ஆரம்பமாகியது.
50 km ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டமானது நெடியகாடு பிள்ளையார் கோவில் பகுதியில் ஆரம்பித்து, தொண்டைமானாறு சந்தியிலிருந்து கதிரிப்பாய் வழியாக அச்சுவேலி சந்தி, அச்சுவேலி சந்தியிலிருந்து வல்லை சந்தி, வல்லை சந்தியிலிருந்து நெல்லியடி, நெல்லியடியிலிருந்து திக்க சந்தி, திக்க சந்தியிலிருந்து வல்வெட்டித்துறை சந்தியில் முடிவுற்றது.
8 km பெண்களுக்கான மரதன் ஓட்டமானது, நெடியகாடு பிள்ளையார் கோவில் பகுதியில் ஆரம்பித்து தொண்டைமானாறு சந்தி வழியாக உடுப்பிட்டி சந்தி, உடுப்பிட்டி சந்தியிலிருந்து வல்வெட்டித்துறை சந்தியின் வழியாக மதவடியில் முடிவுற்றது.
60kg எடைக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பாரம் துக்கி தடைதாண்டல் நெடியகாடு பிள்ளையார் கோவில் பகுதியில் ஆரம்பித்து வல்வெட்டித்துறை மதவடியில் முடிவுற்றது. பாரம் துக்கி தடைதாண்டல் போட்டியானது 40kg எடையுள்ள பாரத்தை சுமந்தபடி வல்வெட்டித்துறை வேம்படி சந்தி வரை ஓடி வந்து அங்கிருந்து போத்தலில் தண்ணீர் அருந்தியபடி வல்வெட்டித்துறை சந்தி வரை ஓடி வந்து வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து சாக்கினை இரண்டு கால்களிலும் போர்த்தி றோயல் அக்கடமி வரை ஓட்டமாக வந்து அங்கு இருக்கும் பலூனை ஊதி உடைத்து, பின்னர் மதவடியில் முடிவுற்றது.
7வயதிற்கு உட்பட்டோர் சைக்கிள் ஓட்டமானது நெடியகாடு பிள்ளையார் கோவில் பகுதியில் ஆரம்பித்து வல்வெட்டித்துறை மதவடியில் முடிவுற்றது. இதில் இருபதிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்குபற்றினார்கள்.
இறுதி நிகழ்வாக ஆண்களுக்கான கழக அஞ்சல் போட்டி நெடியகாடு பிள்ளையார் கோவில் பகுதியில் ஆரம்பித்து வல்வெட்டித்துறை மதவடியில் முடிவுற்றது.
இன்று மாலை வெளி போட்டிகளாக முட்டி உடைத்தல், சாப்பாட்டுப்போட்டி போன்றவையும் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக்கழக போட்டிகளும் உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.