யாழ்பாணத்தின் மிகச் சிறந்தவொரு கல்யாண மண்டபமாக உதயமாகும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறையில் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சுற்று வளாகத்தில், ஆலய தர்மகர்த்தா சபையினால் அமைக்கப்பட்டுவரும் 'வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கலாச்சார மண்டப' கட்டடப் பணிகள் இன்னும் சில வாரங்களில் பூர்த்தியாகும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்யாண மண்டபம் இலங்கையின் தலைநகரில் தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் கல்யாண மண்டபங்களை மிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில்கள், வாகனத்தரிப்பிட வசதிகள், காற்றோட்ட வசதிகள் போன்ற சிறப்பு வசதிகளைப் பெற்று அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டப் பணிகள் முடியும் தறுவாயில் இருந்தாலும், தொடர்ந்து நிகழ்வுகளை நடாத்தத் தேவையான மரத்தளபாடங்கள், சமையல் பாத்திரங்கள், அலுவலகத் தளபாடங்கள், திரைச்சீலைகள், மணமக்கள் அறைகளுக்குத் தேவையான குளிர்சாதன வசதிகள் போன்றவை இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், இவற்றுக்குத் தேவையான நிதியையோ அல்லது மேற்குறிப்பிட்ட பொருட்களை அன்பளிப்பாகவோ பொது மக்களிடமிருந்து நிர்வாகசபையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதுவரை குளிர் சாதனப்பெட்டி ஒன்று, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த திரு.இ மாறன் என்பவரால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் வேறு சில அன்பளிப்புக்களுக்கு முன்வந்துள்ளதாகவும் நிர்வாகசபையினர் தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர் மக்களிடமிருந்து பெறப்படும் நிதியைவிட, தற்பொழுது நிர்வாகசபையினர் இங்கு உள்ளுரிலும் பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டுவதிலும் நாளாந்தம் ஈடுபட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் முத்துமாரியம்மன் கலாச்சார மண்டபம்
முகப்புத் தோற்றம்
ஒருபக்க வெளிப்புறத் தோற்றம்
மேற்தட்டிலிருந்து (Balcony) நிகழ்வு மையத்தின் தோற்றம்
மண்டபத்தைக் கட்டும் Rubins நிறுவனத்தைச் சேர்ந்த துன்னாலைச் சேர்ந்த கணிதவியலாளர் திரு.S சிவசேகரம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.