வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த மருத்துவ சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாதியர் பற்றாக்குறை காரணமாக ஊரணி வைத்தியசாலையியின் மருத்துவ விடுதி (Ward service) சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கு.கமலதாஸினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், குறித்த வைத்தியசாலையின் விடுதி சேவையை இயங்க வைப்பதற்கு தேவையான தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.