வல்வெட்டித்துறை நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் நேற்று சனிக்கிழமை (19.04.2024) வல்வெட்டித்துறை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்த்தேசியக் கட்சியின் வல்வை இணைப்பாளர் வி. கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா, பொதுச் செயலாளரும் வல்வை நகரசபையின் முதன்மை வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், சமூக-அரசியற் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஸ், யாழ் மாவட்ட அமைப்பாளர் செ. பொன் குணரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்போது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், தமிழ்த்தேசியக் கட்சி, சனநாயகத் தமிழரசுக் கட்சி ஆகியனவற்றையும் இணைத்துத் தமிழ்த்தேசியப் பேரவை என்னும் கூட்டணியாக உருப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.