ஓமான் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க தாக்குதல்: 2 மாலுமிகள் உயிரிழப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2026 (வியாழக்கிழமை)
ஓமான் கடற்கரைக்கு அருகிலுள்ள வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த Settebello எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு இந்திய கடலோடிகள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் Forward Seamen’s Union of India (FSUI) அமைப்பின் பொதுச் செயலாளர் மனோஜ் யாதவ் தெரிவித்ததன்படி, உயிரிழந்தவர்கள் Deck Cadet Aditya Sharma மற்றும் Engine Fitter Sivanand Chaurasiya என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கப்பலின் தலைமைப் பொறியாளர் (Chief enginer) Patnala Suresh இன்னும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய அரசு அமெரிக்க துணைத் தூதரகத் தலைவர் Jason Meeks அழைத்து கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM), செவ்வாய்க்கிழமை மாலை ஓமான் வளைகுடா வழியாகச் சென்ற Settebello கப்பல் மீது “துல்லியமான தாக்குதல்” நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. அந்தக் கப்பல் ஈரானிய எண்ணெயை ஏற்றிச் சென்றதாகவும், அமெரிக்க படைகளின் உத்தரவுகளுக்கு கப்பல் பணியாளர்கள் இணங்கத் தவறியதாகவும் CENTCOM கூறியுள்ளது. (Al Jazeera)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.