வல்வெட்டித்துறை இரத்த தான சங்கத்தின் ஏற்பாட்டில் 86 ஆவது மாதிபரும் இரத்த தான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை நெடிய காடு கணபதி மகால் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை இரத்ததான சங்கத் தலைவர் பா. வீரசேந்திரன் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாம் நிகழ்வில் 45 பேர் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக கலந்து கொண்டு குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் விசேட கொரோவிப்புகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.