யோகக்கலை யோகம் என்பது மனம், உடல், ஆன்மா மூன்றும் இனணந்து செயல்படுவதே ஆகும் .ஆயகலைகளின் நாயகன்ஆதியோகி சிவபெருமானால் தோற்றுவிற்கப்பட்டது . அந்த ஆதிபரமசிவனின் சக்தி யாகிய பார்வதிதேவிக்கு அருளப்பட்டு அம்மையார் வாயிலாக நந்திதேவருக்கு உபதேசம் செய்து பின் நந்தி தேவரால் திருமூலர், பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்கும் பின்னர் சித்தர் கள், முனிவர்கள் பலருக்கும் இக்கலை அருளப்பட்டது
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலரால் திருமந்திரம் என்னும் நூல் மூவாயிரம் பாடல் கள் கொண்ட ஒன்பது தந்திரங்களா வகுக்கப்பட்டு அதில் மூன்றாவது தந்திரத்தில் யோகக்கலை பற்றி கூறப்பட்டுள்ளது.
இவரை போலவே பதஞ்சலி முனிவர் யோகசூத்திரம் என்ற நூலில் 196 சூத்திரங்களை 4 பாகங்களாக பிரித்துள்ளார். இதில் 3வது பாகம் யோகாசனமாக காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு நமது முன்னோர்கள் வாயிலாக யோகக்கலை எம்மை வந்து அடைந்தது.
யோகக்கலையானது ஒரு காலத்தில் அரிதாகிதாகிப் போனாலும் இன்று பலராலும் விரும்பி வரவேற்கப்பட்டுள்ளது இந்தியாவில் உதயமாகிய யோகக்கலை இன்று மேற்கத்தைய நாடுகளிலும் இன்னும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பயிற்றப்படுகிறது. சீனா வில் கிட்டத்தட்ட அறுநூறு க்கு மேல் யோகா மையங்களும் சிட்னி யில் இருநூறு மேல் யோகா மையங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இப்போது காணெளி நிலையங்கள் மூலம் நிறைய யோகப்பயிற்சிகளைஅன்றாடம் நாம் கண்களால் பார்க்க முடிகிறது. இலங்கை யில் இன்னும் வளர்ச்சி டையவேண்டும்
இந்த விஞ்ஞான யுகத்தில் புதிய கண்டுபுகளின் காரணமாக சூழல் மாசடைவதால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட மக்கள் யோகப்பயற்சிகளை பெரிதும் விரும்பி கற்கின்றனர் இன்றைய காலகட்டத்தில் ஆண் பெண் இருபாலரும் வேலை க்கு போகவேண்டிய சூழலால் ஏற்படும் வேலை ச்சுமைகள் அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் ஆகிய வற்றிலிருந்துவிடுபட யோகப்பயிற்சிகள் கைகொடுக்கிறது.
அன்றைய காலத்தில் சித்தர் களால் மருத்துவமுறையாக கடைப்பிடிக்க ப்பட்டு வந்த யோகக்கலையானது இடைப் பட்ட காலத்தில் மங்கிப் போனது.ஆனால் இன்று மருந்துவதுறையில் மீண்டும் பயன்பாடாக வந்துள்ளது. அதே நேரம் மருத்துவர்கள் கூட யோகப்பயிற்சிகளை சிகிச்சைமுறையாக காலை மாலை என்று கொண்டு வந்துள்ளனர்
அன்று சித்தர்கள் வகுத்த யோகக்கலைப்பற்றி இன்று பல ஆய்வாளர்கள் ,அறிஞர்கள் நூல்கள் மூலம் எழுதி வருகிறார் கள் .ஆனால் யோகக்கலை என்ற வாழ்வியலை கற்றுக் கொள்வது சுலபமல்ல இது சமுத்திரம்.நான் கற்றது கையளவு . இதில் நீந்தினால் நாமும் சரித்திரம் படைக்கலாம்.
ஆனந்த யோகாலயாவின் மாணவி
திருமதி.ப.அதிரூபசிங்கம்
ஆனந்த யோகாலையாவின் ஆசிரியை திருமதி.சியாமளா சிவநேசன் அவர்களால் றோ.க.பாடசாலை மண்டபத்தில் மாலையில் , திங்கள், புதன்,வெள்ளி ஆகிய நாட்களில் வகுப்பு நடைபொறும். எந்த வயதினரும் பங்கேற்கலாம் வரவேற்கப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.