Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (4 ) – நகரபிதாவிற்கு………………….பொது மக்கள் சார்பில் 101 கோரிக்கைகள்

பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (4 ) – நகரபிதாவிற்கு………………….பொது மக்கள் சார்பில் 101 கோரிக்கைகள்
 
தொண்டைமானாறு முதல் பொலிகண்டி வரை பல பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர் ஆகின்றீர்கள்.
 
வாழ்த்துக்கள்
 
மக்கள் உங்களை நேரடியாக விரும்பினார்களா, கட்சி உங்களைத் தெரிவு செய்ததா, கிரக நிலைகளின் சாதகமா போன்றவற்றை ஒரு புறம் வைத்துவிட்டு, எனது இந்தப் பக்கத்தில் வல்வை நகரசபை பிரதேசத்தில் கண்டுகொள்ள வேண்டிய 101 விடயங்கள் – நான் நேரடியாக பார்த்து அறிந்து கொண்டவை பற்றி விவரிக்கின்றேன்.
 
முதலில் உங்களுக்கு சில அறிவுரைகள்
 
முதலாவது ‘நகரபிதா’ என்ற பதம். எழுத்தளவில் சரி என்றாலும் ‘நகரசபைத் தலைவர்’ என்று போட்டுக் கொள்வதே அழகுபோல் தெரிகின்றது. அதையும் தேவையில்லாமல் அடிக்கடி புகழ்தேடுவதற்காக பாவிக்காதீர்கள்.
 
நீங்கள் ‘சேவை செய்வேன்’ என்று வந்துள்ளீர்கள். மக்களும் சேவை செய்ய ஒருவர் தேவை என்று உங்களை அழைத்துள்ளார்கள். உங்கள் பயணம் கூடியது 4 வருடங்கள். குறைந்தது........கூறுவது கஷ்டம். இந்த பொன்னான காலத்தில் அதிகம் விழாக்களை நாடாதீர்கள். மாலைகளுக்காக அதிகம் தலையத் தாழ்த்தாதீர்கள்.
 
ஏனெனில் உங்கள் முன் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். நீங்கள் இன்னும் வல்வை நகரசபை எல்லைக்குள் போகாத இடங்கள் பல. விழாக்களைத் தவிர்த்து பணிகளை செவ்வனே செய்யுங்கள்.
 
ஒரு வேளை விழாக்களுக்கு போக வேண்டி வந்தாலும், ஏற்பாட்டாளர்கள் உங்களை ‘கெளரவ விருந்தினராக’ அழைத்தால், ‘சிறப்பு விருந்தினர் என்று போட்டால் தான் வருவேன்’ என்று அடம் பிடிக்கக்கூடாது.
 
இந்தப் பதவிக்கு வர முன்னர், ‘இது கிடைக்குமோ கிடைக்காதோ’ என்று நெஞ்சு எப்படி அடிக்கின்றது என்பதை நினைவில் கொஞ்சம் வைத்து செயற்படுங்கள்.
 
‘வளமான வல்வெட்டித்துறை’ என்று தவறியும் எண்ணி செயற்படாதீர்கள். சிக்கலில் முடியும். தொண்டைமானாறு, கொம்மந்தறை, பொலிகண்டி என பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளது எங்கள் வல்வை நகரசபை.
 
நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் நீங்கள் என்றாலும், நகரசபைச் செயலாரை மதித்து செயற்படுங்கள். கடந்த 3 ஆண்டுகளில், நகரசபைத் தலைவர் என்று நீங்கள் ஒருவர் இல்லாதபோதும் – நகரசபைத் செயலாளர் நான் அறிந்தவரை நகரசபையை நன்றாகவே கொண்டு சென்றுள்ளார்.
 
கதிரைக்கு வந்து விட்டீர்கள். இனி மேல் உங்கள் கட்சி அல்லது உங்கள் ஆட்கள் என்ற மட்டத்தில் மட்டும் நில்லாது, மற்றவர்களுடனும் – குறிப்பாக தேர்தலில் போட்டியிட்ட அனைவருடன் கதையுங்கள். உங்களை விட சில விடயங்கள் அவர்களுக்கு பெட்டெர் ஆகத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
 
உங்கள் பிளான் என்ன என்று அவ்வப்போது தெரிவியுங்கள்.  One man show ஆகச் செயற்படாதீர்கள். இந்தக்காலமானது அந்தக்காலம் மாதிரியல்ல. FB யிலும் Whatsup இலும் ‘ஆள் சரி இல்லை’ என்று வர வெளிக்கிட்டால் கஷ்டம் ஆகிவிடும் – குழப்பக்கூடிய வல்லமை சமூக வலைத் தளங்களுக்கு உண்டு. அதற்காக துணிவை இழக்காதீர்கள்.
 
101 கோரிக்கைகள்
 
சரி, நான் கண்டுகொண்டுள்ள 101 கோரிக்கைகளுக்கு அதாவது உங்கள் முன்னுள்ள செயற்திட்டங்களுக்கு வருகின்றேன். எழுந்த மானத்தில் எழுதவில்லை. மாறாக ஆராய்ந்து எழுதுபவை. இவற்றுள் பல என்னால் ஆவணங்களுடன் முன்வைக்கப்படக்கூடியவை/
 
குறிப்பு,
 
நான் வல்வை நகரசபையின் உள்ள பல பாகங்களுக்கு சென்றுள்ள போதிலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டுப்படுத்தப்பட்டவையாகும்.
 
1)      எமது நகரசபை பிரதேச எல்லைக்குள் ஆட்டோ கட்டணத்துக்கு (ஆட்டோக்காரர்களுக்கும் பாதிப்பிலாமல் பொது மக்களும் கொடுக்கக் கூடிய தொகை) ஒரு வரையறை கொண்டு வர முயற்சியுங்கள். சில மாதங்கள் முன்பு தொண்டைமனாற்றில் இருந்து அம்மன் கோவிலடிக்கு வர என்னிடம் 450/- வாங்கி விட்டார்கள். அப்பொழுதான் தெரிந்தது, எனது தந்தையார் ஆட்டோ என்றால் ஏன் ஓடி விலகுபவர் என்று. தூரம் சுமார் 4 ½ கிலோமீட்டர்கள். கொழும்பில் என்றால் 200/- தான் முடிந்திருக்கும். இவ்வாறு கட்டணங்கள் அறவிடுவது பல வறியவர்களை சுருட்டிவிடும்.
 
2) யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை - தொண்டைமானாறு – பருத்தித்துறை வீதியில் பஸ்களின் வரத்து எண்ணிக்கையைக் கூட்ட முயற்சி எடுங்கள். மகஜர் கொடுத்துக் கொண்டிருங்கள். (வீதி பெருப்பிப்பதற்கும், பஸ் சேவைகள்...... என பல விடயங்களுக்கு மற்றவர்கள் போல் நாம் அழுத்தங்கள் கொடுப்பதில்லை)
 
3) பருத்தித்துறை காங்கேசன்துறை பாதையை – நேரடியாக மயிலிட்டி ஊடாக - திறக்கக் கோரி மகஜர் கொடுங்கள். பல கோணங்களால் மகஜர் கொடுத்தால் அவர்கள் நிச்சயம் செவிமடுக்க சாத்தியம் உண்டு. அப்பொழுதுதான் 763 பஸ் சேவை பலனடையும். வல்வெட்டித்துறையின் பிரகாசத்துக்கு பருத்தித்துறை, மயிலிட்டி மற்றும் காங்கேசன்துறை நேரடியாக இணைக்கப்படவேண்டும்.
 
4) பருத்தித்துறை – தொண்டைமானாறு பிரதான வீதி RDA இன் கீழ் இருந்தாலும்,  வீதியை அகலப்படுத்த அழுத்தம் கொடுங்கள். கொடுக்க வேண்டியவர்கள் முழுக்க நாங்கள் தான். உங்கள் வீடு அல்லது உங்கள் உறவினர் வீடு ரோட்டில் உள்ளது என்பதற்காக இதை தாமதப்படுத்தாதீர்கள். குச்சம் ஏத்தம் மிகவும் ஒடுக்கம். சமாதான நீதவான் அகமணிதேவர் சில வருடங்கள் முன்பு சைக்கிளில் போகும் போது இதற்குள் விழுந்து விட்டார். காயம் அடைந்திருந்தார். அந்தக் காலத்தில் Levy bus ஒன்றுதான். இன்று அன்னை முத்துமாரி 7, 8 என்று ஆகிவிட்டது. நான் 15 வருடம் முன்பு கார் வாங்கிய பொழுது நண்பன் ஒருவன் கூறினான், ‘இப்ப கண்டவன் எல்லாம் கார் வைத்துள்ளான்’ என்று. இப்பொழுது ஊரில் அனேகரிடம் குறைந்தது இரு வீலர்களாவது உண்டு. நண்பன் கூறிய கருத்தில் நான் இங்கு கூறவில்லை. காலத்தின் தேவை. பிரதான வீதி விரைவில் அகலப்படுத்தப்படவேண்டும்.
 
5) ஏனைய வீதிகள் புனரமைப்பு - ஏற்கனவே கூறியுள்ளது போல் ‘வளமான வல்வெட்டித்துறை’ என்ற வட்டத்துக்குள் நில்லாது நகரசபையின் சகல எல்லைகளுக்குள்ளும் சென்று பாருங்கள். கடந்த 2 வருடங்கள் முன்பு  திரு.நல்லையா மாஸ்டருடன் கதைத்துக் கொண்டிருந்தபொழுது, ‘எங்கள் வீதியின் நிலையைப்பாருங்கள்’ என்றார். ஏன் இந்த வீதி திருத்தப்படவில்லை என்ற காரணத்தையும் கூறினார்.
 
6) குப்பை – குப்பையை அகற்றிய பின்னர், குப்பைப் பைகள் வீதிகளில் அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றன. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும்.
 
7) தற்பொழுது பல வீடுகளில் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதால் திண்மக் கழிவுகள் அதிகம். இவற்றை நகரசபை ஊழியர்கள் எடுக்கமாட்டார்கள். ஆகவே இவற்றை எங்கு போடலாம் என்று மக்களுக்கு இடத்தை அடையாளப்படுத்துங்கள். சில பள்ளமான பிரதேசங்களை (Low lying land) தெரிவுசெய்யுங்கள்.
 
8) கடற்கரையில் குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டுவதற்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டுவர – கஷ்டம்தான் – என்றாலும் முயற்சியுங்கள்.
 
9) ஜனாதிபதி பிளாஸ்டிக்கு நோ சொல்லிவிட்டாலும், இங்கு இன்னும் நிறைய பிளாஸ்டிக் பறக்கின்றன. ‘No Plastic’ என்பதை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்.
 
10) தொண்டைமானாற்றில் (சந்தியில்) வசதிகள் குறைவு, மேம்படுத்த ஏதாவது செய்யவேண்டும்.
 
11) Asian development bank நிதியுதவியில், வல்வையில் இரண்டு மீன்பிடி நங்கூரப்பகுதிகள் (Fishing anchorage) கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்று ஆதிகோவிலில் மற்றையது கொத்தியாலில். ஆனால் இரண்டை ஒன்றாக்கி அல்லது முதலில் கொத்தியாலில் மாத்திரம் – என்ற ரீதியில் கட்டப்படலாம் போல் தெரிகின்றது. ஈடுபடப்போவது மிகப் பெரிய Amount. நலன்புரிச் சங்கத்திடம் வாங்கக் கூடிய Amount அல்ல. இரண்டு Fishing anchorage கள் இங்கு விரைவில் அமைவதை உறுதி செய்யுங்கள்.
 
11) நவீன மீன் சந்தை – இயக்கம் போட்ட பிளான். நன்றாகக் கட்டியாச்சு. ஆனால் விக்கிறாக்களும் குறைவு, வாங்கிறாக்களும் குறைவு. காரணத்தைக் கண்டறிந்து இதன் தொழிற்பாட்டை அதிகரியுங்கள். இதனால் நகரசபை வருமானம், ஆட்டோ யாவாரம், சந்திக் கடைகள் யாவாரம் போன்றன பெருகும்.  சந்தி மேலும் கலகலப்பாகும்.
 
12) மழை நீர் சீராக வழிந்தோடக்கூடியவாறு வீதிகளை செப்பனிடுங்கள், வடிகால்களை அமையுங்கள். பலருக்கு பக்கத்து வீட்டுக்காரர்களுடன் இதனால் சண்டை.
 
13) நகரசபையில் இருந்து நெடியகாட்டுப் பக்கமாக நடந்து போய் பாருங்கள். Walking Plat form ஆக இருக்க வேண்டிய ரோட்டு ஓரத்தில், வீடுகளுக்கு முன்பாக RDA க்குச் சொந்தமான இடத்தில் எத்தனை விதமான குறுக்குக் கட்டு மானங்கள், தூண்கள், கூரைகள். இவை அகற்றப்பட வேண்டும். வீதியை விட்டு விலகி, பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து போக தடங்கல்கள் அற்ற பாதை ஏற்படுத்தப்படவேண்டும். சிறு வயதில் எனக்கு இது பெரிதாகத் தெரியவில்லை இப்ப நடு வயது போகத்தான் இவற்றின் அவசியம் விளங்குது. (நாங்களும் போட்டிருக்கின்றோம்.  மழைநீர் ஓட வடிகாலைப் போட்டு அதையும் அகற்றி விடுங்கள்)
 
14) வீதிகளை நினைத்தபடி குறுக்காகத் தோண்டுதல், நினைத்தபடி சில இடங்களில் பம்பர்கள்  – ஆபத்தானவை - கவனியுங்கள்.
 
15) ஒரு காலத்தில் இலங்கையில் காத்தான்குடிக்கு அடுத்ததாக மக்கள் செறிவு உள்ள நகரமாக விளங்கியது எமது ஊர். அதனால் தான் வட மாகாணத்தில் உள்ள நகரங்கள் வரிசையில் வல்வெட்டித்துறை இன்றும் காட்டப்பட்டுவருகின்றது.  மக்கள் செறிவு போல் வீடுகளும் பல இடங்களில் நெருக்கம். கழிவு நீர் போக வசதிகள் இல்லை – நகரப் பகுதியில் நல்ல Drainage system அவசியம்.
 
16) உதயசூரியன் கடற்கரை, ரேவடி கடற்கரை, கோவில் வீதிகள் என்று பொது இடங்களில் அமர வெளிக்கிட்டால் – தெரு நாய்களின் உபயம் அதிகம். அதுவும் மழை நேரங்களில் ரோடுகளில் சொல்லிவேலையில்லை. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். (பலர்  தங்கள் வீட்டு நாய்களையும் உபயத்துக்கு வெளியே தான் அனுப்புகின்றார்கள்).
 
17) சில பொது மலசல கூடங்கள் ஏன் இன்னும் தேவை என்று தெரியவில்லை. உதாரணம் அளக்கடவையில் உள்ள கக்குஸ். தேவையில்லாத மலசல கூடங்களை அகற்றுங்கள்.
 
18) சந்தியில் கண்டிப்பாக ஒரு பொது மலசல கூடம் கட்டுங்கள். கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள பொது மலசல கூடம் போல் சிறியதாக மாபிள்கள் வைத்துக் கட்டுங்கள். அப்பொழுதான் கழுவுவது இலகு. கட்டணம் அறவிடுங்கள். திறம்படப் பராமரியுங்கள்.
 
19) சந்தியில் தொடர்ந்தும் காவற்துறையினர் உள்ளதால் பல கடைகள் இன்னும் இயங்க முடியாதநிலை. உத்தேசிக்கப்பட்டுள்ள முன்னாள் வல்வை மன்றக் காணிக்குள் விரைவாக அவர்களைப் போகச் செய்யுங்கள். (அன்னபூரணி மாதிரிக் கப்பல் திறப்பு விழாவின் போது, போலிஸ் இன்ஸ்பெக்டர் உடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது கேட்டேன் – எப்பொழுது போகின்றீர்கள் என்று – இன்னும் 2 வருடத்தில் என்றார்)
 
20) நவீன மீன் சந்தையில் இறைச்சியில் இம்பா மட்டும்தான் தொங்குகின்றது. சிக்குனும், மட்டனும் மிஸ்ஸிங். கண்ட கண்ட இடங்களில் இவை உரிபடுது. சிறிது சிறிதாக இவற்றை மீன் சந்தைக்கு கொண்டுவர முயற்சியுங்கள். அவசரம் காட்டாதீர்கள். நீங்கள் உரிபட்டுப்போவீர்கள்.
 
21) சந்தியை இயன்றவரை மேலும் பெரிதாக்க முயற்சி செய்யுங்கள். சந்தியைச் சுற்றியுள்ள சில காணிகளின் சொந்தக் காரர்கள் இங்கு இல்லை. அவர்களிடம் பேசி இடங்களை கையகப் படுத்துங்கள். நாளைக்கு சந்தியில் உங்களுக்கு ஒரு விழா எடுக்க வேண்டி வந்து, ஒரு பத்தாயிரம் பேர் நிற்க வேண்டி வந்தால்.....பெரிய இடம் தேவை தானே.
 
22) இது அதிகம் போல் தென்படும். ஆனால் என்றோ நடக்கப்போவது. அரசிடம் இருந்து நிதி பெற்று, சந்தியில் அமைந்துள்ள பழைய நகரசபை கட்டத்தை இடித்து, அடக்கமாக - பரப்பளவு கூடியதாக – பாதுகாப்பானதாக – 4, 5 வங்கிகள் அல்லது தனியார் நிறுவனங்கள் செயற்படக் கூடியதாக – வாகனங்கள் நிறுத்தக் கூடியதாக – வெளியில் இருந்து வருவோர் தற்காலிகமாக தங்கிச் செல்லக் கூடியதாக – அழகான – பெயர் சொல்லக் கூடிய (land mark) கட்டடம் ஒன்றை அமைக்க முயற்சியுங்கள். தெற்கில் பல மில்லியன்கள் கணக்கில் ஏராளமான இது போன்ற அபிவிருத்திப் பணிகள் இடித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இங்கு மட்டும் ஏன் முடியாது.
 
23) இதர பகுதிகளிலும் நகரசபைக்கு நிலங்களை (Semi State land) அதிகப்படுத்துங்கள். இனிமேல் இங்கு வராதாவர்களிடம் கேளுங்கள். தந்தால் லாபம். (அண்மையில் நாலு பரப்புக் காணி ஒன்று பிரதான வீதியில் கிடைக்காததால் அரச நிதியில் கிடைக்கவிருந்த நூலகம் ஒன்று கைவிட்டுப் போய் விட்டது என்று நினைக்கின்றேன்)
 
24) மரங்களைப் பாதுகாக்க திடமான நடவடிக்கை எடுக்கவும். அதற்காக அபிவிருத்திப் பணிகளுக்கு தடை போடாதீர்கள். நான் மரங்களைப் பாதுகாக்கவும் என்று கூறுவது – சந்தர்ப்பம் பார்த்து, மரத்தை நாட்டுகின்ற மாதிரி இரண்டு கைகளால் மரக் கன்று ஒன்றை பிடித்து - நடுவது மாதிரி முகத்தை மேல் நோக்கித் திருப்பி - படம் பிடித்து, FB இலே போட்டு சனங்களுக்கு காட்டுவதை கூறவில்லை. மாறாக இருக்கும் மரங்கள் அழிவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள். சென்னையில் போடப்பட்டுள்ளது போல், இங்குள்ள சகல பெரிய மரங்களுக்கும் இலக்கம் போட்டு ஒரு தரவைப் பேணுங்கள், மீறிப் தறிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுங்கள்.
 
25) புதிய மரங்களையும் நாட்டுங்கள். ஆனால் அப்துல் கலாம் 1 லட்சம் மரங்கள் நாட்ட சொன்னார் என்று விவேக் செய்வது போல் செய்யாதீர்கள். அதாவது நடுவதை மட்டும் செய்யாதீர்கள். மரம் வளர்ப்பு என்பது மிகவும் கடினமான பணி. ஒரு மரத்தை வைத்து ஆளாக்க குறைந்தது 25,000 – 50,000.- வரை பிடிக்கும். இது என் அனுபவம் + ஆய்வு. பெயருக்கு மரத்தை வைத்து விட்டு, பாவம் மரம் என்று வேறு சிலர் நீர் ஊற்ற - ‘நான் வைத்த மரம்’ என்று கூறக் கூடிய நிலை வரும் என்றால் மர நடுகையைக் கைவிடுங்கள்.
 
26) வல்வை நகரப் பகுதியில் ஒரே ஒரு மீதமுள்ள பாரிய வெளிப் பிரதேசம் என்றால் அது தீருவில் வெளிதான். இதன் இருப்பை உறுதி செய்யுங்கள். ரேவடி பூங்கா பெயர் பெற்றது போல் இதையும் புகழ் பெறச் செய்யுங்கள்
 
27) யாழில் பாரிய பிரச்சனையாக உருவெடுக்கவுள்ளது நிலத்தடி நீர். ஊரில் ஏற்கனவே சாதுவாக தலை காட்ட வெளிக்கிட்டு விட்டது.  இதிலும் கவனம் செலுத்துங்கள்.
 
28) நிலத்தடி நீர் குறைவு அல்லது உப்பாவது ஒரு புறம் இருக்க, ஏராளமான கக்குஸ் குழிகள் பிரச்சனையை மேலும் சிக்கல் ஆக்குகின்றது. குழிகளில் கட்டுப்பாடு அவசியம்
 
29) சந்தியில் வல்வை நகரசபை வரை படத்தை நாட்டுங்கள். அதில் வல்வை நகரசபை பிரதேசத்துக்குள் உள்ள பிரபல்ய இ டங்களை (வேலுப்பிள்ளை அவர்கள் வீடு, சந்நிதி, விறாச்சிக் குளம், சிவன் கோயில் மடம், ரேவடி பூங்கா........... போன்ற இடங்களை அடையாளப் படுத்துங்கள். இவைகளுக்கு செல்வதற்கான வழிகளை அடையாளப்படுத்துங்கள்.
 
30) ரேவடி, உதயசூரியன், சைனிங்ஸ், நேதாஜி கடற்கரைகள் கழகங்களால் திருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பல பகுதிகள் இன்னும் உங்களால் திருத்தப்படவேண்டியுள்ளது. 
 
31) நான் எனது இரண்டாவது பக்கத்தில் எழுதிய ஊரிக்காடு தொடக்கம் காட்டுப்புலம் வரையான கடற்கரைப்பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறல்களை நிரந்தரமாக நிறுத்த வழி செய்யுங்கள்.
 
 32) நகரசபை அபிவிருத்திப் பணிகளுக்கு மேலும் நிதி தேவை, நிதியை பல வழிகளிலும் கூட்ட முயற்சியுங்கள். அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக பட்சம் நிதியைப் பெற முயற்சி செய்யுங்கள். பல கிராம நகர சபைகள் இதில் வெற்றி பெற்றுள்ளன.
 
34) டெண்டர்கள் கொடுக்கும் போது கவனமாக ஆராயுங்கள். சில அபிவிருத்திப் பணிகளுக்கு Amount அதிகம் கொடுக்கப்பட்டது என ஒரு சிலர் பேசுகின்றார்கள்.
 
35) அபிவிருத்திப் பணிகள் முடிந்த பின் கொடுக்கப்படும் இறுதிக் கட்ட Payment ற்கு முன்னர், குறித்த இடங்களுக்கு சென்று, கட்டுமானங்களை நன்றாகத் தட்டிப் பாருங்கள். சில பல இடங்களில் அபிவிருத்திப் பணிகள் சொதப்பியுள்ளன.
 
36) காதைப் பிளக்கும் ஒலி பெருக்கிச் சத்தங்களை நிறுத்த நடவடிக்கை எடுங்கள். சிவன் கோயில் ஸ்பீக்கர்களில் ஒலி பரப்பப்படும் சத்தம் அளவானது என்கின்றார்கள் பலர்.
 
37) வாகன தரிப்பிடங்களை அடையாளப்படுத்துங்கள்.
 
38) காய் கறிச் சந்தையும் அவ்வளவு பிரகாசிக்கவில்லை. நாட்பட்ட காய் கறிகளை விற்கின்றார்கள் என்று பலர் தெற்குப் பக்கமாகச் செல்கின்றார்கள். என்ன செய்யலாம் என்று பாருங்கள்.
 
39) பொதுவான கடற்கரை அரிப்புக்கு எதிராக கொழும்பில் முறைப்பாடு செய்து தீர்வைப் பெற முயற்சி செய்யுங்கள்.
 
40) நகரசபை விதி முறைகள் சகலரையும் சென்றடைய வழி செய்யுங்கள்.
 
42) தீருவில் பொதுப் பூங்காவிற்கு மீள் உருக்கொடுங்கள். மக்கள் கூடும் இடம் ஆக்குங்கள்.
 
43) விறாச்சிக் குளம், தீருவில் குளம் போன்றவற்றை ஆழப்படுத்தி அகலப்படுத்தி நிலத்தடி நீரை மேம்படச் செய்யுங்கள்.
 
44) கல்விக்கு என்று ஏதாவது வந்தால் சிறுவர் கல்வியில் அக்கறை செலுத்தவும்.
 
45) குடி நீர் வசதி பல இடங்களில் தேவையாகவுள்ளது. பாலச்சந்தரின் ‘தண்ணீர் தண்ணீர் தண்ணீர்’ படத்தில் சரிதா வருவது போல் சில இடங்களில் பெண்கள் குடத்துடன் (கான்) செல்கின்றார்கள்.
 
46) வேலையில்லாப் பிரச்சனை – இதற்கும் உங்களுக்கும் நேரடி தொடர் இல்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற வகையில் – கவர்னரையோ அல்லது ஒரு அமைச்சரையோ சந்திக்க வாய்ப்பைப் பெற்றவர் என்ற ரீதியில் – குறைந்தது எமது பிரதேசத்தில் உள்ள பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்றுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள்
 
47) பல இடங்களில் வீதி மற்றும் ஒழுங்கை வெளிச்சம் மோசமாகவுள்ளது.
 
48) சிறுவர் இந்து மயானத்தில் சிறிய பிரச்சனை ஒன்று உண்டு. அந்தப் பிரச்சனையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
 
49) ஊரணி மடப் பகுதிக்கு வேறு சிலர் சொந்தம் கொண்டாட முனைகின்றார்கள். கவனம் எடுங்கள்.
 
50) ஊரணி ஊற்றை மீண்டும் நகரசபை வசப்படுத்தி அதை தூய்மையாக வைத்திருக்க வழி செய்யவும். ஊற்றுப் பகுதியை மக்கள் நீராடக் கூடியவாறு மாற்றி அமையுங்கள்.
 
51) ரேவடி கடற்கரை பூங்காவை ஒட்டி அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில், அக்கழக இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நிறுத்திவிக்கப்பட்ட,  ‘கடற்கரை நீச்சல் தடாகத்தை’  (Sea Swimming pool) மீண்டும் ஆரம்பிக்க வழி செய்யுங்கள். இது அமைந்தால் வட பகுதியில் அமையும் இது போன்ற முதலாவது தடாகம் இதுவாக விளங்கும்.
 
52) எமது ‘Marine drive’ கட்டுமான பணிகள் நீண்ட நாட்கள் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. முழு மூச்சாக முழுமையாக முடித்து விடுங்கள்.
 
53) பொலிகண்டியிலிருந்து தொண்டைமானாறு வரையான கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க நிரந்தர நிகழ்ச்சித் திட்டம் கொண்டு வாருங்கள்.
 
54) முக்கியம் கடற்கரை மண் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும். இது வரை அள்ளப்பட்ட மண்ணைக் கணக்கிட்டால் - கடற்கரை ஏன் சுருங்கியுள்ளது எனத் தெரியவரும். கடற்கரையில் மண் அள்ளுவது சட்ட விரோதம். ஆனால் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை.
 
55) விளம்பரங்களை ஒட்டக் கூடிய வகையில் சில ஏற்பாடுகளைச் செய்யுங்கள். இதனால பலரின் சுவர்கள் வண்ணம் பெறும்.
 
56) சகல இடங்களுக்கும் சென்று, உங்கள் முன்னால் உள்ள அபிவிருத்திப் பணிகளை இனங்காணுங்கள். இதர நகரசபை மற்றும் கிராமசபைகளுடன் உங்களது திட்டங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
 
57) வறியோர்களை இனங்காணுங்கள். பலர் வெளியிலிருந்து வரும்பொழுது  வறியோர்களுக்கு உதவ விரும்புகின்றார்கள். சரியான தரவுகளை அவ்வாறு உதவக் கூடியவர்களால் பெறமுடியவில்லை.
 
58) சந்தியில் அமைந்துள்ள பழைய நகரசபைக் கட்டடத்தை முழுப் பாவனனைக்கு உட்படுத்துங்கள்.
 
59) சிவபுரவீதி, தூபி வீதி அமைக்கப்பட்டுள்ளது போல், முடிந்தவரை உங்கள் காலத்தில் ஒரு நேர் – அகல வீதியை உருவாக்க முயற்சியுங்கள். ஒழுங்கைகள் சுருங்குவதை அனுமதிக்காதீர்கள்
 
60) மைதானங்களை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுங்கள். எதிர்காலத்தில் எல்லோருக்குமான பொதுச் சொத்தாகவும் மக்கள் கூடும் இடங்களாகவும் இவையே அமையவுள்ளன.
 
61) நெற்கொழு மைதான காணிப் பிரச்சையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுங்கள்.
 
62) வல்வை நகரசபைக்கு உட்பட்ட பொலிகண்டி, மயிலியதனை போன்ற இடங்களில் சொல்லிக் கொள்ளக்கூடிய வகையில் ஒன்றுமில்லை. ஏதாவது செய்யவேண்டும்.
 
63) போன்ற பல இடங்களில் கழிவு நீர் பிரச்சனைகள் உண்டு - நிரந்தரத் தீர்வு வேண்டும். (உதாரணம் - அம்மன் கோயில் பின் வீதி, காலனி நீர் தீருவில் பொதுப் பூங்காவிற்குள்)
 
64) நகரப் பகுதியில் கிணறுகள் மேலும் ஆழமாகத் தோண்டுதல் தடுக்கப்படவேண்டும். கிணறுகளின் எண்ணிக்கையிலும் அமைவிடங்களிலும் கவனம் வேண்டும்.
 
65) வாக்காளர் எண்ணிக்கை குறைந்த சபைகளில் ஒன்று வல்வை நகரசபை. இருக்கும் வாக்காளர்களை எப்படி தக்கவைப்பது, எண்ணிக்கையை எப்படிக் கூட்டுவது என்பதில் ஒரு தூர நோக்கில் கவனம் செலுத்த வேண்டும்.
 
66) பிரதான வருமானம் கடற்தொழில் மற்றும் விவசாயம். இதை அதிகப்படுத்த வேண்டும்.
 
67) வேலையில்லாதோர் தொகை மிக அதிகம். சிறு தொழில்கள் ஆரம்பிக்கப்படவேண்டும்
 
68) பணப் புழக்கத்தை தக்க வைக்க வேண்டும். மக்கள் எடுத்தவுடன் நெல்லியடிக்குப் போனால் நல்லம், உடுப்பிட்டிக்கு போனால் நல்லம் என்று ஓடினால், இங்கு பணப் புழக்கம் குறையும். இது நீண்டகால நோக்கில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
 
69) வருமானம் நிரந்தரமாக உள்ள பகுதிகளில் ஒன்றாக ஆதிகோவில் தொடர்ந்து  விளங்கிவருகின்றது. இங்கு சில அடிப்படை வசதிகள் கவனிக்கப்படவேண்டியுள்ளது.
 
70) ஆழ்கடல் மீன்பிடி வள்ளங்களுக்கு அரசாங்கம் 50% தள்ளுபடி கொடுக்கின்றது. ஒரு சிலரையாவது ஊக்கப்படுத்தவும்.
 
71) பல நமது புலம் பெயர் மக்கள் இங்கு செய்யவென பல சிறிய மற்றும் பெரிய திட்டங்களை வைத்துள்ளார்கள். நிதியுதவியும் செய்ய தயாராக உள்ளார்கள். இவர்களை அடையாளம் கண்டு  இதற்கு ஒரு பாலமாக இருக்க வேண்டும்.
 
72) ரோமன் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர் எண்ணிக்கையைக் கூட்டி, பாடசாலையின் இருப்பை உறுதிப் படுத்த வேண்டும்.
 
73) சிதம்பர அரசியலில் கலக்காதீர்கள்.
 
74) வெளியூர்களில் உள்ள எமது பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பலதுறைகளில் அனுபவம் பெற்றவர்களின் சேவைகளைப் பெறுங்கள்.
 
75) மற்ற இடங்களை விட பெண்களின் பங்களிப்பு இங்கு சில துறைகளில் பரவாயில்லை. ஆனாலும் மேலும் முன்னுக்கு கொண்டுவர இடமுண்டு
 
76) வல்வை மாலுமிகள் சங்க அனுசரணையில் நடாத்தப்படும் NVQ கற்கை நெறிகள் இங்குள்ளவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம். ஆனாலும் இதைப் பற்றிய விழிப்புணர்வு குறைவு. இளைஞர், யுவதிகளிடம் இதை மேலும் கொண்டு சேர்க்க வேண்டும்
 
77) NVQ கற்கை நெறிகள் முப்பதுக்கு மேல் உள்ளன. ஆனால் இங்கு 3 மட்டுமே நடாத்தப்படுகின்றன. ஏனையவற்றையும் இங்கு நடாத்த நடவடிக்க எடுங்கள். இவற்றில் பாதியை இங்கு கொண்டுவருவீர்கள் நீங்களும் ஊரும் எங்கோயோ போய்விடுவீர்கள்
 
78) வருடாந்த நகரசபையை நிதியை மிகவும் காத்திரமான முறையில் பயன்படுத்துங்கள்.
 
79) நகரசபைக்கு வெளியில் ஒரு அறிவிப்பு பலகையை நிரந்தரமாக மாட்டவும். அதில், முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள், மற்றும் இதர விடயங்களை எழுதுங்கள். இதனால் பலரது அபிபிராயங்கள் வெளிப்படும். பலருக்கு என்ன நடகின்றது என்ன நடந்து முடிந்தது என்றே தெரியாமல் உள்ளது.
 
80) கெருடாவில், மயிலியதனை, தொண்டைமானாறு போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக பாறைகள் உடைக்கப்பட்டு நிலம் பல இடங்களில் நாசமாக்கப்பட்டுள்ளது. காணி சொந்தக்காரர் பலர் இங்கு இல்லாததும் உடைப்பவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. இது தடுக்கப்படவேண்டும்
 
81) அத்துமீறி குடியேறிஉள்ளவர்களை எழுப்ப வீட்டுக் காரர்களுக்கு உதவவேண்டும்.
 
82) தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில் வலிகாமம் பிரதேசசபை மேற்கொண்டுவரும் சுற்றுலாத்துறை போல், இக்கரைப் பக்கம் நீங்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும்.
 
83) எமது பிரதேசத்தில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளின் தரம் ஒன்றாக இருக்க வேண்டும் – அதாவது சகல குழந்தைகளின் சமமான தரமான ஆரம்பக் கல்வியைப் பெறவேண்டும்
 
84) மது, சிகரட் போன்றவற்றுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். சின்ன பெடியள் சிலர் பீர், சிகரட் அடிப்பதாக பலர் சொல்லிக் கொள்கின்றார்கள்.
 
85) எமது கடற்கரையோரப் பிரதேசங்களூடாக பெரும் அளவில் போதைப் பொருட்கள் (முக்கியமாக கேரளா கஞ்சா) வந்து போகுது. தடுப்பதிலும், இங்கு அதன் பாவனை இல்லமால் செய்வதிலும் உங்கள் பங்கு பெரிது.
 
86) வெளியூர் வியாபாரிகள் அடிக்கடி அங்கு இங்கு வந்து கடை போட்டு செல்கின்றார்கள். இதனால் இங்கு வரி கட்டி வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் மறைமுகமாக பாதிக்கப்படுகின்றார்கள். இது முற்றாக நிறுத்தப்பட வேண்டும்
 
87) அதோ போல் வெளியூர் பேக்கரிகாரர் எமது பகுதிக்கு வந்து வர்த்தகம் செய்வதற்கு தடை போட வேண்டும் அல்லது வரி பெறப்படவேண்டும்.
 
88) Tax என்றால் எதோ நாங்கள் கட்டக் கூடாத ஒன்று என்று பலர் நினைக்கின்றார்கள். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்
 
89) ஆரம்பப் பள்ளி, பின்னர் 5 ஆம் வகுப்பு வரை படித்து புலமைப் பரிசில், பின் O/L முடிவாக A/L படித்து சித்திபெற்றுள்ளார்கள் பலர். பின்னர் சும்மா இருக்கின்றார்கள். 15 வருடப் படிப்பு சும்மா இருப்பதற்காகவா? குறிப்பாக பெண்பிள்ளைகள். ஏதாவது துறைகளில் இவர்களைப் புகுத்த முனையுங்கள்.
 
90) நகரசபை நிதியில் நிகழ்வுகளுக்கு அதிகம் விரயம் செய்யாமல், அபிவிருத்திப் பணிகளுக்கு அதிகம் செலவு செய்யுங்கள்.
 
91) கோயில்காணிகளை முடிந்தவரை நீண்ட காலக் குத்தகையில் பெறுங்கள். Semi State land ஐக் அதிகப்படுத்த இது ஒரு சிறந்த வழி. பல தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்
 
92) சிவகுரு பாடசாலைக்கு அருகில் வயோதிபர் இளைப்பாறும் மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது போல், பருத்தித்துறை பிரதேச செயலத்தின் ஊடாக இது போன்று பெறக் கூடிய திட்டங்களை அதிகம் பெற முயற்சியுங்கள்.
 
93) சட்ட விரோதமாக இடம்பெறும் சம்பவங்களுக்கு (கள்ள கரண்ட் போன்றவை) எதிராக முறைப்பாடு செய்யுங்கள்
 
94) வல்வை நகரசபை நூலத்தை பகுதியாக இ-நூலகமாக (e-Library) மாற்றுங்கள், சனங்களுக்கு தெரிவியுங்கள்.
 
95) 90 இல் போடப்பட்ட கலாச்சார மண்டபத் திட்டத்தை எடுத்து தூசி தட்டுங்கள். 1000 பேருக்கு மேல் இருக்கக் கூடிய ஒரு கலாச்சார மண்டபத்தை கட்டுங்கள்.
 
96) பழைய பித்தளை, அலுமினியம், இரும்புகளுக்கு – பேரிச்சம்பழம் என்று தெற்கில் இருந்து வந்து பலர் எமது புரதான அடையாளங்களை (Antiques) கொள்ளை அடித்துக் கொண்டு போகின்றார்கள். தடை போட முயற்சியுங்கள்.
 
97) எஞ்சியுள்ள புரதான அடையாளங்களை இனங்கண்டு பாதுகாக்க முயற்சியுங்கள்
 
98) மக்கள் குறைகேட்பு என்னும் அத்தியாயத்தை வாரந்தோறும் ஒவ்வொரு பகுதிகளிலும் மேற்கொண்டு வாருங்கள்
 
99) உங்கள் திட்டங்களில் Transparency கட்டாயம்
 
100) பொதுச் சேவையில் உள்ள ஒருவர் அந்த சேவைகுட்பட்ட வகையில் விமர்சனங்களுக்கு உட்படக் கூடியவர் என்ற குறைந்த பட்ச சட்ட விவகாரத்தை அறிந்து கொள்ளுங்கள்
 
101) வருட முடிவில் – நகர சபை செயலர், நகர சபை உறுப்பினர்கள், நகரசபைத் தொழிலாளர்கள், நீங்கள் மற்றும் உங்கள் உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரின் கூட்டு முயற்சியால்  – செயற்படுத்தப்பட்ட, நிறைவேற்றப் பட்ட திட்டங்களை – நீங்கள் ஒருவர் தனியாக நின்று செய்ததுபோல் – முட்டாள் தனமாக அறிக்கை விடாதீர்கள். அப்படிச் செய்வீர்களேயானால் உங்கள் நாற்காலியின் 4 கால்களில் 2 கால்கள் ஆட்டம்போட வெளிக்கிடும். இறுதியில் உங்கள் சபை குழம்புவதற்கும் - குழப்பப்படுவதற்கும் இது போன்றவை தான் ஆரம்பப்புள்ளிகளாக அமைந்துவிடும்.

கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன்

தொலைபேசி – 00 94 777 64 99 55 (Viber, Whats up)

மின்னஞ்சல்   - marinerathava@yahoo.com

Facebook - athiroobasingam.athavan


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
குமுதினி (இலங்கை) Posted Date: February 03, 2018 at 15:52 
தம்பி ஆதவன்! இன்றைய உங்கள் ஆக்கத்தில் 101காேரிக்கைகள் எனும் தலைப்பிற்கு முதல் எழுதியுள்ள நகரசபைத் தலைவருக்கு கூறிய அறிவுரை மிக மிக அருமை. இது அவர்கள் முக்கியமாக அறியவேண்டியவையே.
மற்றும் உங்கள் காேரிக்கைகளும் நியாயமானவையே.

RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: February 03, 2018 at 09:26 
சிறப்பு ;


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
ஆதவன் பக்கம் (3) - M.K.சிவாஜிலிங்கம் - நான் அறிந்த ஊரின் சேவகன் -
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (2) – அரிப்பும், அழிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
வல்வை பட்டப் போட்டித் திருவிழா அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/01/2025 (வியாழக்கிழமை)
டொல்பின்கள் உயிரிழப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2025 (புதன்கிழமை)
யாழில் 15 ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வை நலன்புரிச்சங்கம் அவுஸ்ரேலியா கோடைக்கால ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வை பட்டப் போட்டித் திருவிழா, நிகழ்ச்சி விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2025 (செவ்வாய்க்கிழமை)
சிங்கம், யானை உள்ள காட்டில் வழிதவறி 5 நாட்கள் கழித்த சிறுவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/01/2025 (செவ்வாய்க்கிழமை)
அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி கையெழுத்து போராட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2025 (திங்கட்கிழமை)
மகளீர் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
திருவெம்பாவை இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/01/2025 (சனிக்கிழமை)
யாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2025 (வியாழக்கிழமை)
இறுதிக்கிரியை பற்றிய விபரம் - திருமதி சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2025 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2025 (புதன்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
புகையிரத இருக்கைகள் முன்பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
ஒரு வாரத்தில் இடம்பெற்ற 5 விமான விபத்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை நகர அபிவிருத்தி திட்டம் பொது மக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்-செல்வி மைதிலி முருகவேள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (73) – விழிஞ்சம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்தின் மூத்த படைப்பாளியும் ஊடகவியளருமான யோகேந்திரநாதன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தனியார் பேரூந்து சாரதிக்கு எதிராக நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
திருப்பிறப்பு வாழ்த்துகள். (ஆறுமுகம் ராஜ்குமார் )
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
ரேவடி வி.க யாப்பு வெளியிடும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
மாவிட்டபுரத்தில் பிரமாண்ட திருக்குறள் வளாகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீடு உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
பொன்னாலை பருத்தித்துறை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai