தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவரும், ஈழத்தமிழர்களின் நலனில் பற்றுக் கொண்டவருமான விஜயகாந்தின் உடலுக்கு சிவாஜிலிங்கம் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த விஜயகாந்தின் இறுதிக்கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.
இதன்போதே விஜயகாந்தின் புகழுடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம், ஈழத்தமிழர்களின் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறையையும் பற்றையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
ஈழத்தமிழர்களின் சார்பில் தனது நன்றியையும் அஞ்சலியையும் அவர் விஜயகாந்தின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இதேவேளை திரு. சிவாஜிலிங்கம் அவர்கள், விஜயகாந்தின் மனைவி திரு. பிரேமலதா அவர்களை அவர்களது அலுவலகத்தில் கடந்த 26 ஆம் திகதி சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.