Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
அண்மையில் வட மாகாணசபைக்குத் தெரிவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களை, பொது மக்கள் தேவைப்பட்டால் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். அவரின் அனுமதியுடன் அவரின் கைபேசி இலக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் பொதுவாக அறியப்பட்டவர், அதிலும் கப்பல் துறை சார்ந்தவர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கடந்த பல ஆண்டுகளாக சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு தொழில்களை நடாத்திவருபவர். வல்வையில் இன்றுள்ள பல கப்பல் தலைவர்கள் (Captain) உட்பட்ட பல கப்பல் துறை .........
பிரபல தமிழ் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். ஸ்ரீ வேணுகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு வயது 82. சுகவீனம் காரணமாக சென்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த சில நாட்களாக .......
அரச தலைவர்கள் பங்கு கொள்ளவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு தபால் சேவைகள் அமைச்சு 5 ரூபா மற்றும் 25 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகளையும், மற்றும் 30 ரூபா பெறுமதியான தபால் அட்டையொன்றையும் வெளியிடவுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை 14 ஆம் திகதி காலை 9.45 மணிக்கு ........
வல்வெட்டித்துறைச் சென் செபஸ்தியார் தேவாலயப் புனரத்தாரணப்பணிகள் தற்பொழுது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த வருடம் தேவாலய நிர்வாகத்தினரால் ஆரம்பித்திருந்த தேவாலயத் திருப்பணிகளிற்கு இந்த வருட ஆரம்பத்தில் ஒரு சில வல்வை நலன்விரும்பிகள் எடுத்த முயற்சியினால்...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் கீழ் பிரிவு மற்றும் மேற்பிரிவு பாலகர்களுக்கான கொன்றைவேந்தன் மற்றும் திருக்குறள் மனனஞ்செய்யும் போட்டி இன்று மதியம் மகளீர் மகா வித்தியாலய பிராத்தனை மண்டபத்தில் நடைபெற்றது. கீழ் பிரிவு பாலகர்களின் கொன்றை வேந்தன்.........
வல்வெட்டித்துறை சிதம்பராகல்லூரியில் நேற்று நடைபெற்ற நிறுவன தின, பரிசளிப்பு விழாவினை தொடர்ந்து சிதம்பராகல்லூரி அதிபர் திரு.இராஜதுரை அவர்களினால் ஆண்டறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலையின் நிறைகள் மற்றும் தேவைகள் போன்றவற்றை உள்ளடங்கியிருக்கும் ..........
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் தெரிவு நேற்று முன்தினம் காலை இடம் பெற்றது. நேற்று முன்தினம் காலை 10.00 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் திரு.மயூரதரன் புதிய...
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினமும், 2012 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவும் இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் திரு.ராஜதுரை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. சுமார் 02:30 மணியளவில் சிதம்பராக் கல்லூரியின் கலையரங்கவளாகத்தில்.....
பருத்தித்துறை லீக்கினால், பருத்தித்துறை லீக்கினில் பதியப்பட்டுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இச்சுற்றின் இன்றைய போட்டியில் கொற்றாவத்தை ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து......
வல்வெட்டித்துறை அளக்கடவை ஒழுங்கையில் அமைந்துள்ள வல்வை பொது விளையாட்டரங்கிற்கு (Futsal ground) நேற்று மாலை பல வெளிநாட்டு மாணவர்கள் வருகை தந்திருந்தனர். அமெரிக்காவின் கரோலினா Davidson University யைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் வல்வை பொதுவிளையாட்டரங்கை.........
தற்பொழுது CINEC (Colombo International Nautical and Engineering College) இன் யாழ் கிளையில் நடைபெற்றுவரும் மாலுமிகள் கற்கைநெறிகளுக்கான இறுதிப் பரீட்சைகளுக்கு முன்னோடியாக வல்வை மாலுமிகள் நலன் புரிச்சங்கம் (Vaiswa) பயிற்சி வகுப்புக்களை நடாத்தவுள்ளது.
யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை உள்பட்ட பல இடங்களில் நேற்றிலிருந்து பரவலாக கடும் மழை பெய்துள்ளது. வல்வெட்டித்துறையில் நேற்று நண்பகலிருந்து மாலை வரை தொடர் மழை பெய்துள்ளது. தற்பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மழை அவ்வப்போது பெய்து.....
வல்வெட்டித்துறை சந்தியில் இதுவரை அமைந்திருந்த இராணுவமுகாம் பகுதியில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்கள் மற்றும் காணிகள் நேற்று முன்தினம் பருத்தித்துறையில் வைத்துக்கையளிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறைச் சந்தியில் அமைந்திருந்த 7 ஆவது விஜயபாகு படையணியினரால் ........
வல்வெட்டித்துறை அளக்கடவை ஒழுங்கையில் அமைந்துள்ள வல்வை பொது விளையாட்டரங்கிற்கு இன்று மாலை பல வெளிநாட்டவர்கள் வருகை தந்திருந்தனர். அமெரிக்காவின் Davidson University, Carolina யை சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் வல்வை பொது விளையாட்டரங்கை பார்வையிட்டதுடன் சில நிமிடங்கள்.....
யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில் கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த பருத்தித்துறை இறங்கு துறைமுக வீதி நேற்று மக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த வீதி 1996 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கை இராணுவத்தின் பருத்தித்துறை முகாம் பிரதேசத்திற்குள்....
வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. மேற்கொண்டு தொடர்ந்து திருப்பணி வேலைகளை முன்னெடுக்க அடியார்களின் உதவிகளை தர்மகர்த்தா சபையினர் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதத்தை தொடர்ந்து தொண்டைமானாறு செவ்வசந்நிதி முருகன் ஆலயத்திலும் சூரன்போர் நேற்று முன்தினம் மிகுந்த பக்தர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக..
உண்மையான நடுநிலையான பாரபட்சமற்ற செய்திகளை வெளியிடும் அதேவேளை சமூகத்திற்கு ஏற்புடையதல்லாதவற்றை பிரசித்தப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பாகும். எமது இணையதளத்தின் முதலாவது ஆண்டு நிறவையொட்டி, திரு.குலநாயகம் அவர்கள் அனுப்பியிருந்த.....
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்கந்தசஷ்டி விரதத்தின் தொடர்ச்சியாக இன்று, தெய்வானை திருக்கல்யாணம் இன்று வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மாலை சுமார் 6 மணியளவில் விசேட பூஜைகளுடன் ஆரம்பித்திருந்த திருக் கல்யாண நிகழ்வு சற்று நேரத்துக்கு முன்னர்..
வல்வெட்டித்துறை சந்தியில் இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் உள்ள 10 வீட்டு உரிமையாளர்களிடம் வீடுகள் இன்று இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது. இக்கையளிப்பு பருத்தித்துறை இராணுவமுகாமில் இடமபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் ஏனைய குடியிருப்பாளர்களை கிராமசேவையாளிடம் அணுகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
யாழ். வல்வை சிதம்பராக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டிற்கான நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் 11/11/2013 அன்று கல்லூரியின் கலையரங்க வளாகத்தில் பிற்பகல் 02.00 மணியளவில் நடைபெறவுள்ளது. வல்வை பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், பிரதம விருந்தினராக......
1996 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் நிரந்தரமாக வெளியேறியுள்ளனர். இதனை முன்னிட்டு தற்பொழுது பொதுமக்கள் பழைய இராணுவ முகாம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக்களையும் மற்றைய இடங்களையும் பார்வையிட்டு......
1996 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் நிரந்தரமாக வெளியேறியுள்ளனர். இதனை முன்னிட்டு தற்பொழுது பொதுமக்கள் பழைய இராணுவ முகாம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புக்களையும் மற்றைய இடங்களையும் பார்வையிட்டு ....
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தி வருகின்ற 7 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் லீக் முறையில் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இத் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் சென் மேரிஸ்......
கடந்த 6 நாட்களாக நடைபெற்ற கந்தசஸ்டி விழாவின் 6 ஆவது நாளான நேற்று வல்வெட்டிதுறைச் சிவன் கோவிலிலும் முருகப் பெருமானின் சூரசம்காரம் (சூரன் போர்) இடம்பெற்றது. இதன்பொழுது சூரபத்மன் முருகப்பெருமானை வெற்றி கொள்வதற்காக சக்கரவாகனப் பட்சி வேடமிட்டு வருவது மிகச் சிறந்த முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட காணொளி கீளே இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்கந்தசஷ்டி விரத்ததின் தொடர்ச்சியாக இன்று வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் சகல முருகன் ஆலயங்கள் மற்றும் பல ஆலயங்களில் நடைபெறவுள்ளது. வல்வெட்டிதுறைப் பிரதேசத்தில் வல்வை சிவன் கோவில், பொலிகண்டி கந்தவனம் சுப்ரமணியசுவாமி கோவில், தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆகிய கோவில்களில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை புற நிலப் பகுதியான பொலிகண்டி கந்தவனம் கந்தசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா சூரன்போர் இன்று பிற்பகல் சிறப்பாக நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய கந்தசஷ்டி விழாவின் ஜந்தாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை சூரன்போர் சிறப்பாக.......
கடந்த 4 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன்கோவிலிலும் இன்று மாலை சூரன்போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இன்று பிற்பகல் 04.00 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து முருகன்பெருமான் கேடயவாகனத்தில் எழுந்தருளி சூரனோடு போர் புரியும் நிகழ்வு சுமார் 07.00 மணியளவில் நடைபெற்றிருந்தது.
சூரன்போர் நாட்டின் பல பாகங்களில் நடைபெற்றுவந்தாலும், வல்வைப் பிரதேசத்தில் அன்று தொட்டு இன்றுவரை நடாத்தப்படுவது தனித்துவமானது. இந்த வகையில் கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் 1987 ஆம் ஆண்டு கந்தசஷ்டி சூரன்போர் நிகழ்வானது, வல்வையில் நிகழ்த்தப்படுவதுபோல் வேஷ்டி அணிந்து வல்வையர்களால் ........
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.