இந்தியாவில் நீண்டகாலமாகத் தஞ்சமடைந்து வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு முக்கியமான சட்டரீதியான நிவாரணத்தை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs), 2026 நவம்பர் 5ஆம் திகதி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பின் மூலம், குறிப்பிட்ட சில வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள, உரிய அரச அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, பொதுவான கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டாயங்களிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாருக்கு இந்தச் சலுகை பொருந்தும்?
இந்திய மத்திய அல்லது மாநில அரசால் இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்டு, 2015 ஜனவரி 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளே இந்தச் சலுகைக்குத் தகுதியுடையவர்கள்.
அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தத்தின்படி, இந்தியாவிற்குள் நுழைதல், இந்தியாவில் தங்கியிருத்தல் மற்றும் இந்தியாவை விட்டு வெளியேறுதல் ஆகியவற்றுக்கான பொதுவான செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, பயண ஆவணம் மற்றும் விசா தொடர்பான கட்டாயங்களிலிருந்து இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
(Source – The Gazette of India, Extraordinary, S.O. 6027(E), 05.11.2026.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.