திரு அருணாசலம் பாலசிங்கம் அம்மன் கோவிலடி, வல்வெட்டித்துறை.
ஜனனம் 28/07/1920 - மறைவு 14/03/2013
ஆறாதே எம் நெஞ்சம் ஆறாதே
"அப்பா" என்றே நாம் உங்களை ஆசையுடன் அழைத்து நின்றோம்
இப்பாரில் இனி நாம் அப்பா என யாரைத்தான் அழைத்திடுவோம்
அன்புடனே எமையெல்லாம் அருகமர்த்திப் பேசிடுவீர்கள்
உங்கள் பேச்சிலே நாம் கொள்ளை இன்பம் கண்டிடுவோம்
ஆறுதலாய் அன்புடனே பேசி அறிவுரைகள் தந்திடுவீர்கள்
நீங்கள் எமக்களித்த அறிவுரைகள் என்றும் எம் நெஞ்சில்
குஞ்சுகளைக் குட்டிகளைக் தாயினங்கள் காப்பது போல்
எமையெலாம் ஆதரவுடன் அணைத்துக் காத்தீர்கள்
உங்கள் அணைப்புக்காக நாங்கள் என்றும் காத்திருப்போம்
எப்படித்தான் உங்கள் அரவணைப்பை நாம் பெற்றிடுவோம்
இறைவன் தாம் விரும்பி உங்களைத் தம்முடனே சேர்த்திடினும்
எம் உணர்வுகளை என்றென்றும் உங்களை சுமந்து நிற்கும்
ஆறாத உள்ளங்களுடன் ...........
அன்புடைவீர், நிகழும் நந்தன வருடம் பங்குனித்திங்கள் 01ம் நாள் 14/03/2013 வியாழக்கிழமையன்று சிவபதமெய்திய எமது கும்பத்தலைவர் திரு அருணாசலம் பாலசிங்கம் அவர்களின் இறுதிக்கிரியைகளில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், அஞ்சலி செலுத்தியும், அனுதாபம் தெரிவித்தும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியோட்டி கிரியைகள் நிகழும் பங்குனித்திங்கள் 16ம் நாள் 29/03/2013 வெள்ளிக்கிழமை காலை 07.00 மணியளவில் மருத்தீஸ்வரர் கோயில் அருகாமையில் இருக்கும் மண்டபத்தில் அந்தியேட்டிக் கிரிகைகள் நடைபெற்று, அன்று முற்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் வீட்டில் மதிய போசனமும் இடம்பெறும். அதில் கலந்து கொள்ளுமாறு உற்றார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .