எங்கள் ஐயாவின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும்,தொலைபேசியிலும்,மின்னஞ்சல் மூலமாகவும் அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்தச் செய்தி மூலமாக எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகளும், மதிய போசனமும் எதிர்வரும் சனிக்கிழமை 15/11/2015 அன்று பிற்பகல் 12.30 மணி முதல் நடைபெறவிருப்பதால் உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும் கலந்து சிறப்பித்துக் கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
அந்தியேட்டி நிகழ்வுகள் யாவும் அன்னாரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற அதே மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத் தருகின்றோம்.