31ஆம் நாள் நினைவஞ்சலியும், சபிண்டீகரண அழைப்பும், நன்றி நவிலலும்
மண்ணில் :-09.02.1948 விண்ணில் :-08.01.2015
அமரர் தங்கராசா ஜெயராசா
(உரிமையாளர் ஜெயராசா படமாடம், பிரதான வீதி, பருத்தித்துறை)
திங்களொன்று ஓடிச் சென்றதுவே எம்
அன்புத் தெய்வம் எம்மை விட்டகன்று
இணையில்லா நல் வாழ்வை எமக்களித்து நீங்கள்
இறையடி சேர்ந்தீரே !
கண்களில் கண்ணீர் வழிந்தோட சென்ற
திசைதனைப் பார்த்து ஏங்கி நிற்கின்றோம்
மீண்டும் எப்போது எமை நாடி வருவீர் என்று .....................
அன்னாரின் மரணச் செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும் கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள், பதாகைகள், வெளியிட்டோருக்கும், மற்றும் வழிகளிலும் உதவி புரிந்த யாவருக்கும் எண்கள் குடும்பம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் (07.02.2015) சனிக்கிழமை அன்று அதிகாலை 04.30 மணியளவில் கீரிமலை தீர்த்தக்கடற்கரையிலும், வீட்டுக்கிரியைகள் நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிராத்தனைகளிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.