இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
1986 ஆம் ஆண்டு வரை இலங்கையின் முதலாவது மிகப் பெரியதும் உலகில் நான்காவது பெரியதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சித்திரத் தேர் இன்றைய தினம் 20.04.1986 அன்று எரியூட்டி சாம்பலாக்கப்பட்டது.
யாழ் குடாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இக்காலப்பகுதியில், தொண்டமனாறு அக்கரைப் பகுதியில் முகாமிட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் இதே நாளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த செல்வச் சந்நிதிப் பகுதியில் முன்னேறிய போது இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்தே குறித்த தேர் எரிக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.