வல்வை நகர அபிவிருத்தி திட்டம் பொது மக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் (UDA) தயாரிக்கப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபைக்கான அபிவிருத்தி திட்டம் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெறும் முகமாக அலுவலகத்திலும் மற்றும் பொது நூலகத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சபையின் இணையத்தளத்திலும் (valvettithurai.uc.gov.lk) மற்றும் முகநூல் பக்கத்திலும் ( Urban council valvettithurai) பார்வையிடலாம்.
பொதுமக்கள் மற்றும் சபையின் அபிவிருத்தியில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரும் குறித்த அபிவிருத்தி திட்டத்தினை பார்வையிட்டு தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2025.02.25ம் திகதிக்கு முன்னர் மின்னஞ்சல் முகவரிக்கோ (urbancouncilvvt@gmail.com) அல்லது தொலைபேசி மூலமாகவோ (0212263973 அல்லது செயலாளர்,நகரசபை, வல்வெட்டித்துறை எனும் முகவரிக்கோ கடிதம் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.