கவனிக்கப்படாத வல்வை வீராங்கனையின் 800 மீட்டர் 2.02 செக்கன் சாதனை, நிமாலியின் 02:03.5 செக்கனே இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச சாதனை!
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2017 (புதன்கிழமை)
நடைபெற்று முடிந்த பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வி பிருந்திகா 800 மீட்டர் ஓட்டத்தினை 2.02 செக்கனில் ஓடி புதிய சாதனைய நிலை நாட்டியிருந்தார்.
இது முன்னர் 1998 ஆம் ஆண்டு பருத்தித்துறை செயலக மட்டத்தில் இருந்த ஏற்படுத்தப்பட்ட சாதனையை முறியடித்ததாக பதிவான போதும், இவரது சாதனை இலங்கையில் இதுவரை 800 மீட்டரில் ஏற்படுத்தப்பட்ட சாதனையை முறியடிப்பதாக அமைந்துள்ளது.
இலங்கையில் பெண் வீராங்கனைகளைப் பொறுத்தவரை 800 மீட்டர் ஓட்டத்தினை நிமாலி லியானாராச்சி (Nimali Liyanarachchi) என்னும் பெண்மணி கடந்த வருடம் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி யாழில் நடைபெற்ற National sports festival இல் 02:03.5 செக்கனில் ஓடி இதற்கு முன்னர் ஸ்ரீயானி டம்மிக்க மெனிக்கே (Sriyani Dhammika Menike) 1992 ஆம் ஆண்டு பார்சிலோனா (Barcelona, Spain) நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஓடியிருந்த 02:03.85 ஐ முறியடித்திருந்தார்.
மேற்குறித்த தரவுகள் Athletic Association of Sri Lanka (AASL) இடம்பெற்றுள்ளது. குறித்த தரவு https://en.wikipedia.org/wiki/List_of_Sri_Lankan_records_in_athletics என்னும் விக்கிபீடியாவிழும் கொடுக்கப்பட்டுள்ளது.
வீராங்கனை பிரிந்திகாவின் திறமையைபை பதிவு செய்ய அவருக்கும் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கும் உதவக் கூடியவர்கள் முன்வரவேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.