பொது பணிகளுக்கு உரிய பங்களிப்பை செய்து வருவதும் ஒருமுன் மாதிரியான செயற்பாடு - M.K சிவாஜிலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், வடக்குமாகணசபை உறுப்பினர் - (Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)
(Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பொது பணிகளுக்கு உரிய பங்களிப்பை செய்து வருவதும் ஒருமுன் மாதிரியான செயற்பாடு
18.10.2013
வாழ்த்துச்செய்தி
வல்வெட்டித்துறை.org என்ற இணையதளத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இச்சேவை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டுக்குள் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
குறிப்பாக பக்கம் சாராமல் செய்திகளை வெளியீடுவது, கல்வி, கலை, கலாச்சார, விளையாட்டு, சமயத்துறைகளுக்கு மாத்திரமில்லாமல், சமூக பணிகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுதலுக்குரியது.
வல்வெட்டித்துறையில் இருந்து பாய்மரக்கப்பல் மூலம் 1938ம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணமாகிய அன்னபூரணி கப்பலின் மாதிரி ஒன்றை உருவாக்கி பவளவிழாவையொட்டி (75 ஆண்டுகள் பூர்த்தி ) வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வை சனசமூக சேவா நிலையத்தில், நீங்கள் காட்சிப்படுத்தத் தீர்மானித்திருப்பது எம் இளம் சந்ததிக்கு எமது வரலாறுகளை நினைவுபடுத்துவதாக அமையும்.
பொது பணிகளுக்கு உரிய பங்களிப்பை செய்து வருவதும் ஒருமுன் மாதிரியான செயற்பாடு ஆகும். தமிழ் மொழியை காப்பற்ற, வளர்க்க எடுக்கும் முயற்சிகள் குறிப்பாக குழந்தைகளுக்கு தமிழ் பெயரினை சூட்ட வழி செய்வது என்பன எம் இனத்தின் இருப்பை தக்க வைக்கும் முயற்சி என்பதில் ஐயமில்லை.
தங்களின் முயற்சிகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
நன்றி.
அன்புடன் மக்கள் சேவையிலுள்ள,
M.K சிவாஜிலிங்கம்
(வடக்கு மாகாணசபை உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.