கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான 2014 ஆம் ஆண்டுக்குரிய பொதுத் தகவல் தொழில் நுட்ப பரீட்சைகள் (General information Technology exam - GIT) இன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறுகின்றது.
வல்வை சிதம்பராக் கல்லூரியின் மாணவ மாணவிகளும், வல்வை மகளிர் பாடசாலையின் மாணவிகளும், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மற்றும் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைந்துள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றமளிக்கின்றனர்.
நாடு பூராகவும் உள்ள 1114 பரீட்சை மத்திய நிலையங்களில், இப்பரீட்சைக்கு மொத்தம் 137,842 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.